arasiyal news | ஜனாதிபதி தேர்தல்: 4 பேர் மனு தாக்கல்| Dinamalar

ஜனாதிபதி தேர்தல்: 4 பேர் மனு தாக்கல்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி வி.கே.அக்னிகோத்ரி, கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, குவாலியரைச் சேர்ந்த ஆனந்த் சிங் குஷ்வாகா, டில்லியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் அகர்வால், வாரணாசியைச் சேர்ந்த நரேந்திர நாத் துபே மற்றும் தமிழகம் தர்மபுரியைச் சேர்ந்த இலியாஸ் ஆகிய 4 பேர், இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இலியாஸின் பெயர், எந்த லோக்சபா தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பதற்கான சான்றிதழை, அவர் சமர்ப்பிக்காததால், அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்வோர், வாக்காளர் பட்டியல் சான்றிதழுடன், 15 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அத்துடன், வேட்பு மனுவை, குறைந்தபட்சம், 50 பேர் முன்மொழிந்திருக்க வேண்டும். 50 பேர் வழிமொழிந்திருக்க வேண்டும், என்றார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை