Students make change in village | ஊர் முழுக்க அரசு அதிகாரிகள்; தகர்ந்து போன ஜாதிப்பூசல்கள்: மாற்றத்தை நிகழ்த்திய மாணவர்கள் | Dinamalar
Advertisement
ஊர் முழுக்க அரசு அதிகாரிகள்; தகர்ந்து போன ஜாதிப்பூசல்கள்: மாற்றத்தை நிகழ்த்திய மாணவர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சேசம்பட்டி கிராமத்தில் ஓய்வு நேரங்களில் மாணவர்களே தனிவகுப்பு நடத்தி வருகின்றனர். இதனால், படிப்பவர்களின் எண்ணிக்கையும், அரசு வேலையில் சேர்பவர்களின் எண்ணிக்கையும் அதிரித்து வருவதுடன், ஜாதிப்பூசல்களும் அறவே ஒழிந்துள்ளது.


முதல் விதை: சேசம்பட்டியில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இக்கிராமத்தில் படித்து முடித்த நான்கு முதல்தலைமுறை பட்டதாரிகள், வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது வேலைக்காகத் தயாரான பிறகு, ஓய்வாக இருந்த மற்ற நேரங்களில் அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் தனி வகுப்பு எடுத்து வந்தனர். பின்னர் வேலை கிடைத்த பிறகும், வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். இது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. படித்த மாணவர்கள் நடத்தும் வகுப்பு என்பதால் அங்குள்ள பெற்றோர்களே முன் வந்து, தங்கள் குழந்தைகளை வகுப்பில் சேர்த்தனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் இறுக்கமான ஜாதிய கட்டமைப்பு இருந்த நேரத்தில் தலித் மாணவர்களையும் வகுப்பில் சேர்த்தனர். ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது. பின்னர் சகஜ நிலைக்கு வந்தது. இன்று அனைத்து ஜாதி மாணவர்களும் இங்கு படிக்கின்றனர்.


மாணவர்களே ஆசிரியர்கள்: பாடம் நடத்தும் ஆசிரியர்கள் ஊரில் இல்லாத போது, அங்கு படிக்கும் மாணவர்களில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களிடம் வகுப்பு நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தனர். இது ஐந்து ஆண்டுகளாக நடந்தது. பின்னர் அடுத்த தலைமுறை மாணவர்கள் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்தனர். அம்மாணவர்கள் கல்லூரி விடுமுறை நாட்களில் இங்கு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. எனவே, விடுமுறையில் ஊருக்கு வரும் மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் அக்கறையுடன் பாடம் நடத்தினர். இதனால் பள்ளி இடை நிற்றலும், தேர்வில் தோல்வியும் இல்லாமல் போனது. அதுமட்டுமின்றி, இன்று 90 சதவீதம் பேர் இங்கு கல்வியறிவு பெற்றிருக்கின்றனர்.


ஊர் முழுக்க அரசு அதிகாரிகள்: இப்பகுதி பொருளாதார, தொழில் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளதால், அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இயல்பாக இருக்கிறது. இதற்காக, படிக்கும் காலங்களில் பாடத்திட்டத்தோடு, அரசு வேலைகளில் சேர்வதற்கான பயிற்சியிலும் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோடை விடுமுறை காலங்களில் இதற்கென்றே சிறப்பு வகுப்புகள் இங்கு நடக்கின்றன. அந்தந்தத் துறையில் பட்டம் பெற்ற மாணவர்கள், இங்குள்ள தனியார் கட்டடத்தில் வசதி படைத்தோரிடம் கட்டணம் பெற்றும், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாகவும் வகுப்பு நடத்துகின்றனர். பத்து ஆண்டுகளாக இங்கு சிறப்பு வகுப்புகள் நடப்பதால் அரசுப் பணியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாணவர்களின் இது மாதிரியான வழிகாட்டுதலுக்குப் பலனாக, இன்று ஊரின் மொத்த மக்களில் பாதிபேர் அரசுப் பணிகளில் உள்ளனர்.


பல்வேறு பயிற்சி: இப்பகுதியில் அரசு வேலையில் சேர்பவர்கள், அந்தந்தத் துறை தொடர்பான வேலைவாய்ப்புகள் குறித்து அடுத்த தலைமுறை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து காவலராக தேர்வாகி இருக்கும் சின்னதம்பி கூறியதாவது, ""நானும் இங்குள்ள தனி வகுப்பில் படித்தேன். காவல் துறையில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக தனி வகுப்பில் படித்து, தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்தேன். இன்று ஓசூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறேன். விடுமுறை நாட்களில் இங்கு காவல்துறையில் வேலைக்குச் சேர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்,'' என்று சொல்லி விட்டு, மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் சென்றார். இது போல், தொழிற்கல்வி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கும் மாணவர்களை இங்கு தயார் படுத்துகின்றனர்.


- அ.ப.இராசா -


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sitaramenv - Hyderabad,இந்தியா
22-ஜூன்-201208:29:35 IST Report Abuse
sitaramenv சமுதாயத்தை நூதன முறையில் சீர்திருத்தும் செம்மல்களே நீங்கள் வாழ்க. உங்கள் சேவை மேலும் மேலும் வளர் இறைவன் அருள் புரிவான். மிக மிக மிக மிக முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து விடாதீர்கள். எந்த கட்சியை சேர்ந்த அரசியல் வாதிகளையும் நெருங்க விடாதீர்கள். பல ஜாதிகளின் கொடுமையைவிட பல கட்சிகளின் கொடுமை மிக மிக அருவருப்பானது, அழிவுப்பாதையை நோக்கி செல்லக்கூடியது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
P ganapathy kumar - Dhaka  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201223:23:09 IST Report Abuse
P ganapathy kumar பொருளுதவி என்பது ஒரு நாள் பலன். நீங்கள் செய்கின்ற அறிவுதவி அவரவர் வாழ்நாள் மட்டுமின்றி அவர்களின் சந்ததி்களின் பாதைகளையே மாற்றி அமைத்து விட்டீர்கள். உங்களின் ஈடுஇணையற்ற ஈகை குணத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்கவளமுடன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Karthi Keyan - chennai,இந்தியா
19-ஜூன்-201211:43:19 IST Report Abuse
Karthi Keyan முன்மாதிரியான பள்ளி., வாழ்க வளர்க., தொடரட்டும் உங்கள் பணி..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ravindran Vrk - Bangalore,இந்தியா
19-ஜூன்-201211:24:11 IST Report Abuse
Ravindran Vrk Good work team. My hearty wishes to them. We are also from NGO called Vazhai, operating in the Dharamapuri District - @ Eriyur, Pennagaram TK for educational support. It is a youth non-profit organization run by first generation student which nurtures the 1st generation students in that area. Vazhai sucessfully completed 7 years, touch the lives of 200+ students. We people are basically from software, banking , teaching professional hailed as 1st generation learners and operating from Bangalore and Chennai. you can also join your hands with us to help the rural children. If any one interested, please visit www.vazhai.org or contact me @+91-9945349702. "வாழை" இது அன்பில் செழித்த உறவு... இது தலைமுறை தாண்டிய கனவு.. - ரவீந்திரன் VRK,பெங்களூர்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
llekshmiganthan - Chennai,இந்தியா
19-ஜூன்-201210:25:17 IST Report Abuse
llekshmiganthan Really a role model village Lekshmiganthan Chennai.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201210:17:13 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) சூப்பர்.. ஜாதிகள் இல்லா சமுதாயம் என்பது பாரதியின் கனவு. எல்லோரும் இங்கே படிக்கும் நல்ல செய்திகளையும், நல்ல கருத்துக்களையும், தங்கள் வாழ்க்கையால் அமல்படுத்த வேண்டும். கருத்துக்கு Thumbs up போடுவதை விட, அதை நடைமுறை படுத்த பழக வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
19-ஜூன்-201210:09:51 IST Report Abuse
villupuram jeevithan கலாம் கனவு நிறைவேறும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
G.Gopalakrishnan - Tuticorin,இந்தியா
19-ஜூன்-201208:52:42 IST Report Abuse
G.Gopalakrishnan பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்த மாணவர்களுக்கு இறைவன் எல்லா நிறைவுகளையும் தர வேண்டுகிறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
chandrakanth - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201208:45:32 IST Report Abuse
chandrakanth சின்னச் சின்ன நல்ல முயற்சிகள் செய்தால் கூட போதும், அவை மிகப்பெரிய பலனை கொடுக்கும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இவர்களுடைய பொறுப்புணர்வுக்கும், சீரிய முயற்சிக்கும் வாழ்த்துக்கள் பல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Karthikeyan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201201:13:15 IST Report Abuse
Karthikeyan A.p. Raaja ...nee schoolla uruthimozhi sonnappo.. Unkooda iraivankkam sonna karthikeyan. Is here . V.m.ghss.periyakulam :)
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்