arasiayal news | திக்விஜய்சிங் சொன்னது எங்கள் கருத்தல்ல: காங்கிரஸ் கட்சி விளக்கம்| Dinamalar
Advertisement
திக்விஜய்சிங் சொன்னது எங்கள் கருத்தல்ல: காங்கிரஸ் கட்சி விளக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: "" மம்தா பானர்ஜி குறித்து திக்விஜய் சிங் தெரிவித்த கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல. அவரது சொந்த கருத்து,'' என, காங்கிரஸ் கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், "ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, பக்குவமில்லாமல் செயல்படுகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் நடத்திய ஆலோசனை விவரங்களை மீடியாக்களுக்கு தெரிவித்தது, முலாயம் சிங் யாதவுடன் இணைந்து, தன்னிச்சையாக மூன்று பேரின் பெயர்களை அறிவித்தது போன்ற விஷயங்களில், தவறாக செயல்பட்டார். எல்லாவற்றுக்குமே ஒரு எல்லை உள்ளது' என, கூறியிருந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், திரிணமுல் காங்., நீடித்து வரும் நிலையில், திக்விஜய் சிங் தெரிவித்த இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில், இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,"மம்தா பானர்ஜி குறித்து, திக்விஜய் சிங் தெரிவித்தது, அவரது சொந்த கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல. காங்கிரஸ் கட்சி சார்பில், கருத்துக்களை தெரிவிப்பதற்கு, அவருக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை'என, தெரிவிக்கப்பட்டுள்ளது. திக்விஜய் சிங், கட்சி மேலிடத்தின் கண்டனத்துக்கு ஆளாவது, இது முதல் முறையல்ல. ஏற்கனவே பாட்லா என்கவுன்டர் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, கட்சி மேலிடத்தின் கண்டிப்புக்கு ஆளானார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Komberi Mookkan - Atlanta ,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201201:34:10 IST Report Abuse
Komberi Mookkan பொடிப் பையன் ராகுல் சொல்றத தவிர வேற எதுவும் காங்கிரஸ் கட்சியின் கருத்தல்ல... இப்படி நல்லா புளி போட்டு வெளக்கி சொல்லுங்கப்பா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்