court news | நித்யானந்தா சீடரின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி | Dinamalar
Advertisement
நித்யானந்தா சீடரின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு: நித்யானந்தா சீடர் வள்ளி ராமநாதன் தாக்கல் செய்த, "ஹேபியஸ் கார்பஸ்' மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


கடந்த சில நாட்களுக்கு முன், பிடதி நித்யானந்தா ஆசிரமத்தில் நடந்த கலாட்டாவின் போது, நித்யானந்தா தலைமறைவாக இருந்து, பின், நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நேரத்தில், அவரது சீடர் வள்ளி ராமநாதன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவில், "ராம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம், நித்யானந்தா மீது சுமத்தப்பட்ட இரண்டு வழக்குகளிலும், ஜாமின் கொடுத்து உத்தரவிட்டது. ஆனால், பிடதி போலீசார், அவரை விடுதலை செய்யாமல், வேண்டுமென்றே வேறொரு வழக்கை, அவர் மீது தொடுத்து கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அவரை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' என்று கூறியிருந்தார். இம்மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த மூன்று நாட்களுக்கு முன், ராம்நகர் மாவட்ட எஸ்.பி., அனுபம் அகர்வாலுக்கு நோட்டீஸ் அளித்தது. உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, ராம்நகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அனுபம் அகர்வால், உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதியிடம் அவர் கூறுகையில், ""நித்யானந்தா, மைசூரு சிறைச்சாலையிலிருந்து ஜாமின் பெற்று, மதுரைக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்று விடப்பட்டார். தற்போது அவர், மதுரை ஆதீனத்தில் இருக்கிறார்,'' என்றார். இதையடுத்து, வள்ளி ராமநாதன் மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 29,2016