court news | ஆதர்ஷ் வழக்கை விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அதிகாரமில்லை: மும்பை ஐகோர்ட்டில் மகாராஷ்டிர அரசு தகவல்| Dinamalar
Advertisement
ஆதர்ஷ் வழக்கை விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அதிகாரமில்லை: மும்பை ஐகோர்ட்டில் மகாராஷ்டிர அரசு தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மும்பை: "ஆதர்ஷ் வழக்கை விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு அதிகாரம் இல்லை' என, மகாராஷ்டிர அரசு, மும்பை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.


மும்பையில் ராணுவ வீரர்களுக்காக ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் சார்பில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர், விதிமுறைகளை மீறி, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ததாக தகவல் வெளியானது. மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர்கள் சுஷில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஷ்முக் உள்ளிட்டோருக்கும் இதில் பங்கு இருப்பதாகக் கூறப்பட்டது.


இதுகுறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கும்படி, ராணுவ அமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்த வழக்கு விசாரணை, மும்பை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில் சகாரே, தன் வாதத்தில் கூறியதாவது: மகாராஷ்டிர மாநில அரசோ, ஐகோர்ட்டோ இந்த வழக்கை விசாரிக்கும்படி சி.பி.ஐ.,க்கு பரிந்துரை செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை விசாரிப்பதற்கு சி.பி.ஐ.,க்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரம் குறித்து நீதி கமிஷன் அமைத்து விசாரிக்கப்பட்டது. அந்த கமிஷன் அளித்த அறிக்கையில், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ள இடம், மாநில அரசுக்கு சொந்தமானது என்றும், ராணுவ அமைச்சகத்துக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில், சி.பி.ஐ.,க்கு எந்த வேலையும் இல்லை. இவ்வாறு அனில் சகாரே கூறினார். இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பொபாடே, மிருதுளா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச், இந்த வழக்கை விசாரிப்பதற்கு மாநில அரசு ஒப்புதல் எதுவும் அளிக்கவில்லை என, பதில் மனு தாக்கல் தாக்கல் செய்யும்படி, மகாராஷ்டிர அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்