afternoon lunch system workers job order : politiciens are in fear | சத்துணவு பணியாளர்கள் நியமனம் : கலக்கத்தில் அரசியல்வாதிகள் | Dinamalar
Advertisement
சத்துணவு பணியாளர்கள் நியமனம் : கலக்கத்தில் அரசியல்வாதிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்களுக்கு, நேர்மையான முறையில் பணி நியமனம் செய்ய, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதால், அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளனர்.மாவட்டத்தில் காலி சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர், சமையலர், உதவியாளர் என, 516 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு சிபாரிசின்றி, நேர்மையான முறையில் நேர்முகத் தேர்வு நடத்த, கலெக்டர் அலுவலகத்தில் தனியாக விண்ணப்பங்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான நேர்முகத் தேர்வு, ஜூன் 23 முதல் 25 வரை நடக்கவுள்ளது. கருவூலம், சுகாதாரத் துறை, மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலக அரங்கு என, நான்கு இடங்களில் நடக்கிறது. தேர்வுக் குழுவில், துறை தலைமை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். விண்ணப்பித்தவர்களே பங்கேற்க வசதியாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில், சவுக்கு மர தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் பாலாஜி, ""நேர்முகத் தேர்வு, நேர்மையாக நடத்தப்படும். சிபாரிசு என யாரும் வரக் கூடாது. அப்படி வருபவர் விண்ணப்பங்கள், நிராகரிக்கப்படும். புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம். புரோக்கர்கள் குறித்து புகார் தரலாம்,'' என்றார். பணியிட நியமனம் பெற்றுத் தருவதாகப் பலரிடம் அரசியல்வாதிகள் பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாக கெடுபிடியால், பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாய நிலையால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதற்கு முன் நடந்த சமூக நலத் துறை, சுகாதாரத் துறை, ஆதி திராவிட நலத் துறை பணி நியமனங்களில், இதே நடைமுறையை மாவட்ட நிர்வாகம் கடைபிடித்தது. அதே போன்று சத்துணவுப் பணியிடங்களிலும் இதே நிலையை கடைபிடிப்பதால், இதன் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poornima - Singapore,சிங்கப்பூர்
26-ஜூன்-201201:25:55 IST Report Abuse
Poornima நேர்மையான முறையில் பணி நியமனம் செய்யும் கலெக்டர் பாலாஜி அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்