district news | 'ஒழுக்கமுள்ள சமுதாயம் நாட்டுக்கு தேவை' | Dinamalar
Advertisement
'ஒழுக்கமுள்ள சமுதாயம் நாட்டுக்கு தேவை'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

அவிநாசி: ""ஒழுக்கமுள்ள சமுதாயம் மலர்ந்தால் நாட்டுக்கு நல்லது,'' என்று உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தம் பேசினார்.

அவிநாசி அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் செந்தூர் பாலிடெக்னிக் கல்லூரி திறப்பு விழா நேற்று நடந்தது. ஸ்ரீசெந்தூர் அறக்கட்டளை அறங்காவலர் சண்முகன் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் மகேஸ்வரன் வரவேற்றார். கல்லூரியை திறந்து வைத்து, எஸ்.கே.எம்., குழுமங்களின் தலைவர் மயிலானந்தம் பேசியதாவது: இளைஞர்களின் மனங்களில் சமுதாய ஒழுக்கம் குறித்த மன மாற்றம் இருக்க வேண்டும்; அனைவரிடமும் திறமை, அறிவு, ஆற்றல் உள்ளது. அதைக்கொண்டு சக மக்களை, தேசத்தை உயர்த்த வேண்டும்.

தற்கால இளைஞர்களிடம் அறிவும், திறமையும் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், ஒழுக்கமும், பண்பாடும் இல்லை. ஒழுக்கம், நன்னெறியுடன் கூடிய கல்வி மட்டுமே சமுதாயத்தை உயர்த்தும். எனவே, அவ்வகையில் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும், என்றார்.நூலகத்தை திறந்து வைத்த, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகையில், ""சமுதாயத்தின் லாப நோக்கமே எங்களுக்கு முக்கியம் என்று துவக்கப்பட்டுள்ள இந்த பாலிடெக்னிக், கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி அறிவு புகட்டுவதில் முன்னோடியாக திகழும். சமுதாய உணர்வோடு கல்வி வழங்குவதால், உறவுகள் மேம் படும். தற்போதைய கால கட்டத்தில் அருகி வரும் உறவுகள், குடும்பங்களை சிதறடிக்கிறது. மதிப்பெண் தேவை; அதே சமயம் வாழ்வின் மதிப்பும் தேவையல்லவா?,'' என்றார்.

கம்ப்யூட்டர் ஆய்வகத்தை சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் முதல்வர் அர்ஜூனன், வேதியியல் ஆய்வகத்தை தத்தனூர் ஊராட்சி தலைவி திலகவதி, ஆங்கில ஆய்கவத்தை நம்பியூர் பேரூராட்சி தலைவர் கமலம், இயற்பியல் ஆய்வகத்தை ஈரோடு மாவட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர். ஸ்ரீ செந்தூர் அறக்கட்டளை பொருளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

கல்லூரி தாளாளர் கூறுகையில்,"புதிதாக துவக்கப்பட்டுள்ள ஸ்ரீசெந்தூர் பாலிடெக்னிக்கில், நடப்பாண்டில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், எலக்டரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பத்தாம் வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது,' என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்