district news | கின்னஸ் சாதனைக்காக தீப்பெட்டி அளவில் திருக்குறள் புத்தகம்| Dinamalar

தமிழ்நாடு

கின்னஸ் சாதனைக்காக தீப்பெட்டி அளவில் திருக்குறள் புத்தகம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: கின்னஸ் சாதனைக்காக தீப்பெட்டி அளவிலான திருக்குறள் புத்தகம் தயார் செய்யும் சாதனை முயற்சியில் செய்யாறு வாலிபர் ஈடுபட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தலைமை தபால் நிலையம் அருகே வசிப்பவர் ஜெயப்பிரகாசம் (39). இவர் கின்னஸ் சாதனை முயற்சிக்காக நீண்ட நாட்களாõக போராடி வருகிறார். இதற்காக ஓய்வு நேரங்களில் பல முயற்சிகளை மேற்கொண்ட வருகிறார்.
தற்போது, தீப்பெட்டி அளவிலான சிறிய அளவில் திருக்குறள் புத்தகம் தயார் செய்துள்ளார். இவை, 4 செ.மீ. அகலம், 5 செ.மீ., நீளம் கொண்டவை. ஒன்பது நாளில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
இதில் உள்ள எழுத்துக்களை லென்ஸ் உதவியுடன் மட்டுமே படிக்க முடியும். இவர் ஏற்கனவே நூலிழையால் உலக வரைபடம், உயரம், 10 அடி அகலம் கொண்ட இந்திய வரை படம் ஆகியவற்றை வரைந்துள்ளார்.
அப்துல்கலாமின், "அக்னி சிறகுகள்', "ஜூலியஸ் சீஸர்' நாடகம், தினம் ஒரு திருவாசகம், ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள், உள்ளிட்ட எட்டு புத்தகங்களை, 114 நாளில், 1, 501 பக்கம் அளவில், ஒரு லட்சத்து, 87 ஆயிரத்து, 478 எழுத்துக்கள், முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்கும் போது, நேராக தெரியும் வகையில் எழுதியுள்ளார்.
இது போன்ற சாதனை முயற்சியினை தமிழக அரசு ஊக்கப்படுத்தி கின்னஸ் சாதனையில் இடம் பெற அதற்கான போட்டியில் கலந்து கொள்ள தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் டி.ஆர்.ஓ., வளர்மதியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை