district news | இலவச திட்டங்கள் வழங்குவதில் புறக்கணிக்கப்படும் ஊராட்சிகள்| Dinamalar

தமிழ்நாடு

இலவச திட்டங்கள் வழங்குவதில் புறக்கணிக்கப்படும் ஊராட்சிகள்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்: அமைச்சர் தொகுதிக்குள் உள்ள ஊராட்சிகளில் தமிழக அரசு திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தி வரும் நேரத்தில், பல்லடம் தொகுதியில் உள்ள திருப்பூர் ஒன்றிய பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில், வடக்கில் உள்ள 10 ஊராட்சிகளும், மாநக ராட்சியின் 30 வார்டுகளும் திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில் அடங்கியுள்ளன. மீதியுள்ள 20 வார்டுகளை உள்ளடக்கி தெற்கு சட்டசபை தொகுதி அமைந்துள்ளது. திருப்பூர் ஒன்றியத்தின் தெற்கு பகுதியில் உள்ள இடுவாய், மங்கலம், முதலிபாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகளும், மாநகராட்சியின் 10 வார்டுகளும் பல்லடம் தொகுதியில் அடங்கியுள்ளன.

தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கும் திட்டம், வருவாய்த்துறை மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, சட்டசபை தொகுதி வாரியாக வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் வடக்கு தொகுதி, அமைச்சர் தொகுதியாக இருப்பதால், திருப்பூர் மற்றும் அவிநாசி தாலுகா அதிகாரிகள் மூலமாக 90 சதவீத ஊராட்சிகளில் இலவச பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில் பட்டம்பாளையம், சொக்கனூர், மேற்குபதி, தொரவ லூர், வள்ளிபுரம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூர், காளிபாளையம், கணக்கம்பாளையம் மற்றும் பொங்குபாளையம் ஆகிய 10 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில், ஈட்டிவீரம்பாளையம் நீங்கலாக, மற்ற ஒன்பது ஊராட்சிகளில் இலவச பொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சர் தொகுதியில் அடங்கியுள்ள ஊராட்சிகளில், தமிழக அரசு பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் இலவச பொருட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தொகுதியில் உள்ள திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு எந்தவொரு நலத்திட்ட உதவியும் கிடைக்கவில்லை. இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம் வடக்கு தொகுதியில் 90 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஈட்டிவீரம்பாளையத்திலும் விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகினறன. ஒரே ஒன்றியத்துக்கு உட்பட்டிருந்தும், தொகுதி மாறிவரும் ஊராட்சிகளுக்கு, தமிழக அரசின் திட்டம் சென்றடையவில்லை. பல்லடம் தொகுதியில், பல்லடம், பொங்கலூர் மற்றும் திருப்பூர் என, மூன்று ஒன்றிய பகுதிகள் அடங்கியுள்ளன. எனவே, ஒன்றியம் வாரியாக பிரித்து, தமிழக அரசின் திட்டங்களை பாகுபாடின்றி செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை