rain for tamilnadu | தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : 'வங்கக் கடலில் புதிதாக உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று இடியுடன் மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில இடங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில், நேற்று பகல் முழுவதும், வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 100 டிகிரிக்கும் குறைவாகவே வெப்பம் பதிவாகியது. இந்நிலையில், ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரைக்கு இடையே, வங்கக் கடலில், புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், "கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, சின்னகல்லூரில் 18, தேவாலாவில் 14, வால்பாறையில் 9, நடுவட்டம், கூடலூர் பஜாரில் தலா 5, உதகமண்டலத்தில் 4, கிராண்டு அணைக்கட்டு, பெரியார் அணை, திருச்சி விமான நிலையம், திருச்சியில் தலா 3 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை நகரில், இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அவ்வப்போது, தரைக் காற்றும் பலமாக வீசும்' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை