district news | பெண்ணை மொபைலில் படம் பிடித்தவர் கைது| Dinamalar

தமிழ்நாடு

பெண்ணை மொபைலில் படம் பிடித்தவர் கைது

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருச்சி: கழிவறைக்கு வந்த பெண்ணை மொபைல்ஃபோனில் படம் பிடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 9 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் எதிரே கே.டி.எம்., என்ற மளிகைக்கடை உள்ளது. மளிகைக்கடைக்கு சொந்தமான குடோன், திருச்சி பாலக்கரை எடத்தெரு அருகே வி.எம்., பேட்டையில் உள்ளது. நேற்று முன்தினம் காலை குடோன் சுவர் ஓட்டையில் இருந்து, அதனருகில் இருந்த கழிவறைக்கு சென்ற இளம்பெண் ஒருவரை, மில்லில் வேலை செய்யும் பால்வண்ணன் என்பவர் மொபைல்ஃபோனில் படமெடுத்தார்.
இதை பார்த்து அலறியபடி வெளியே வந்த இளம்பெண், வி.எம்.,பேட்டையை சேர்ந்த சக்திவேல் (35) மற்றும் அப்பகுதியில் உள்ளோரிடம் கூறி அழுதார். உடனே மில்லுக்கு சென்ற சக்திவேல், அண்ணாமலை உள்ளிட்டோர் பால்வண்ணனை அழைத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்து விசாரணை நடத்தினர்.


அப்போது, "என்னை போலவே மில்லில் வேலை பார்த்த இரண்டு பேர் கழிவறைக்கு வந்த பெண்களை படமெடுத்ததாக' பால்வண்ணன் தெரிவித்தார். தகவலறிந்த மில் உரிமையாளர், வியாபார சங்க பிரதிநிதிகளை சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த வைத்தார்.
ஆனால் அப்பகுதி மக்களோ, "மில் உரிமையாளர் இங்கு வந்தால்தான் பால்வண்ணனை விடுவிப்போம்' என்று கூறினர். இதுகுறித்து வியாபார சங்க பிரதிநிதிகள் காந்தி மார்க்கெட் போலீஸில் புகார் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், சக்திவேல், அண்ணாமலை ஆகியோரை விசாரணைக்காக காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உட்பட 200 பேர், போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டு, திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். தகவலறிந்த டி.சி., ராமையா, ஏ.சி., ஸ்டாலின் மற்றும் போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சக்திவேல் மற்றும் அண்ணாமலை விடுவித்த பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போலீஸாரால் பிடித்து வரப்பட்ட சக்திவேல், அமைச்சர் சிவபதியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸார் நிபந்தனைபடி வி.எம்.,பேட்டையில் இருந்து விடுவிக்கப்பட்ட பால்வண்ணன், படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சக்திவேலின் சகோதரர் அசோக்குமார் அளித்த புகாரின் பேரில், பால்வண்ணனை போலீஸார் கைது செய்தனர். பால்வண்ணன் அளித்த புகாரின் பேரில், சக்திவேல் உள்பட ஒன்பது பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை