district news | நிலத்தை மீட்டு தராவிட்டால் சுதந்திர தினத்தில் குடும்பத்துடன் உயிர் துறக்க விவசாயி தீர்மானம்| Dinamalar

தமிழ்நாடு

நிலத்தை மீட்டு தராவிட்டால் சுதந்திர தினத்தில் குடும்பத்துடன் உயிர் துறக்க விவசாயி தீர்மானம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தஞ்சாவூர்: "எங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தராவிட்டால், வரும் சுதந்திரதினத்தில் தமிழக முதல்வரின் காலடியில் குடும்ப உறுப்பினர்கள் 25 பேர் கூண்டோடு உயிர் துறக்க தீர்மானித்துள்ளோம்' என, விவசாயி ஒருவர், தஞ்சை மாவட்ட எஸ்.பி.,யிடம் கொடுத்த புகார் மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா டாக்டர் தேவதாஸ் காலனி ரோட்டைச் சேர்ந்தவர் விவசாயி கேசவன் பத்தர். இவர் தஞ்சை மாவட்ட எஸ்.பி., அனில்குமார் கிரியிடம் நேற்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி மற்றும் பெரியகத்திக்கோட்டை, ஊமத்தநாடு பகுதியில் எங்களுக்கு சொந்தமான நிலம், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ளது.
இந்நிலத்தை, ஏழு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த, தி.மு.க., பிரமுகரும், காண்ட்ராக்டருமான சண்முகம் தலைமையில் செல்லையா, பக்கிரி, கருப்பையா, தமிழன், கருப்பையா ஆகியோர் கட்டப்பஞ்சாயத்து செய்து அபகரித்து விட்டனர்.
இதுகுறித்து தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் எங்களை அடித்து உதைத்து, ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, பலவித கொடுமைகளை மேற்கண்ட தரப்பினர் செய்து வருகின்றனர்.


இதுகுறித்து ஏற்கனவே கலெக்டர் மற்றும் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை போலீஸார் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
நான் ஏழையாக உள்ள நிலையிலும் தொடர்ந்து போராடி வருகிறேன். ஆனாலும் நில ஆக்கிரமிப்பாளர்கள் என்னை கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
தற்போது தமிழக முதல்வர், தனிப்பிரிவையே ஏற்படுத்தி, நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், என் நிலத்தை மீட்டுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வரும் சுதந்திரத்தினத்தன்று (ஆக., 15) தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலடியில், எங்கள் குடும்பத்தை சேர்ந்த 25 பேரும் உயிர்துறக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மனுவிலுள்ள கோரிக்கையை துண்டுப்பிரசுரமாக அடித்து, அதன் கீழ்ப்பகுதியில், ""64வது சுதந்திரதினத்தில் தமிழக முதல்வர் காலடியில் என் குடும்பத்தினர் 25 பேர் உயிர் விடுவோம், இங்ஙனம், கேசவன் பத்தர் மற்றும் குடும்பத்தினர், பேராவூரணி தாலுக்கா, தஞ்சை மாவட்டம்'' என, குறிப்பிட்டு மனுவுடன் இணைத்து வழங்கியுள்ளனர்.
இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை