district news | உம்பளச்சேரி இன மாடுகளை "வெப்சைட்' மூலம் பிரபலப்படுத்த தீவிர நடவடிக்கை| Dinamalar
Advertisement
உம்பளச்சேரி இன மாடுகளை "வெப்சைட்' மூலம் பிரபலப்படுத்த தீவிர நடவடிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருத்துறைப்பூண்டி: ""திருவாரூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்து வரும் உம்பளச்சேரி இன மாடுகளை உலகளவில் வெப்சைட் மூலம் பிரபலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் நடராசன் தெரிவித்தார்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொற்கையில் உம்பளச்சேரி இன கால்நடை கன்றுகள் பேரணி மற்றும் பரிசளிப்பு விழா, திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடந்தது. கால்நடைத்துறை இணை இயக்குனர் (பொ) ராதா தலைமை வகித்தார்.
உம்பளச்சேரி கால்நடை பேரணியை துவக்கி வைத்து, சிறந்த கால்நடைகளுக்கு பரிசு வழங்கி, திருவாரூர் மாவட்ட கலெக்டர் நடராசன் பேசியதாவது:
சேலம் என்றால் மாம்பழத்துக்கு புகழ்பெற்றது என்பது போல, உம்பளச்சேரி கால்நடை இனம் திருவாரூர் மாவட்டத்து ஒரு பொக்கிஷம். 1950ம் ஆண்டு துவங்கப்பட்ட கொற்கை கால்நடை பண்ணையில் பால் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. உம்பளச்சேரி இன மாடுகள் இரண்டரை லிட்டர் முதல் ஐந்து லிட்டர் வரை மட்டுமே பால் கறந்து வருகிறது. இதை ஐந்து லிட்டருக்கு மேல் கறக்க ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.


பாரம்பரிய உம்பளச்சேரி இன மாடுகளின் விந்தணுக்களை எடுத்து பராமரிக்க மரபணு வங்கி அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும். திருவாரூர் மாவட்டத்தில் பால் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. பசு மாடுகள் வாங்குவதற்கு அரசு கடன் வழங்குகிறது. இதேபோல உம்பளச்சேரி இன மாடுகளை வாங்கவும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொற்கை கால்நடை பராமரிப்பு பண்ணையில் உம்பளச்சேரி இன மாடுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை உலகளவில், "வெப்சைட்' மூலமாக பிரபலப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். திருவாரூர் மாவட்டத்திலுள்ள உம்பளச்சேரி இன மாடுகளை பாதுகாக்கும் நோக்கத்தில் வெளிமாநிலங்களுக்கு இவை செல்லாமல் தடுப்பதுடன், திருவாரூர் மாவட்டத்தில் விலையில்லா மாடுகள் வாங்கும் திட்டத்தில் உம்பளச்சேரி பசு மாடுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்