சென்னை : மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 14 ஆயிரத்து 450 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) பி.எஸ்சி., நர்சிங், பி.பி.டி., - பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை, கடந்த 4ம் தேதி துவங்கியது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில், கடந்த 13ம் தேதி வரை, விண்ணப்பங்கள் விற்பனை நடந்தது. இவ்விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் முடிந்தது. இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலர் சுகுமார் கூறும்போது, ""மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கு மொத்தம் 22 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன. இவற்றில், 17 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் விற்பனையாகின. இவற்றில், 14 ஆயிரத்து 450 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்த பின், மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும்,'' என்றார்.