group 4 exam 21 thousand applicant | குரூப் - 4 தேர்வு: 300 பணியிடங்களுக்கு 21 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குரூப் - 4 தேர்வு: 300 பணியிடங்களுக்கு 21 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் போட்டி

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் - 4 தேர்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டு அளவான 300 பணியிடங்களுக்கு, 21 ஆயிரத்து, 699 மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, 10 ஆயிரம் பேரை தேர்வு செய்ய, குரூப் - 4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி., அறிவித்ததும், லட்சக்கணக்கானோர் போட்டி போட்டு, இணையதளம் வழியாக விண்ணப்பித்தனர். குரூப் - 4 தேர்வுக்கு, 10ம் வகுப்பு கல்வித் தகுதி என்பதும், விண்ணப்பதாரர் எண்ணிக்கை எகிறியதற்கு முக்கிய காரணம். ஜூலை 7ம் தேதி, காலை 10 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை, 244 மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும், 24 மையங்களில் தேர்வு நடக்கிறது. 4.47 சதவீதம் பெண்கள் இறுதிக்கட்ட புள்ளி விவரப்படி, 11 லட்சத்து, 74 ஆயிரத்து, 513 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், 6 லட்சத்து, 14 ஆயிரத்து, 625 பேர் ஆண்கள்; 5 லட்சத்து, 59 ஆயிரத்து, 888 பேர் பெண்கள் என, தேர்வாணைய செயலர் உதயசந்திரன் தெரிவித்தார். மொத்த விண்ணப்பதாரர்களில், 47.7 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், நாகை, நெல்லை, திருச்சி, நாமக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில், தலா 50 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். போட்டியில், மாற்றுத்திறனாளிகளின் பங்கும் கணிசமாக உள்ளது. 21 ஆயிரத்து, 699 பேர் விண்ணப்பித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு வேலைவாய்ப்பில், 3 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 ஆயிரம் பணியிடங்களில், 300 பணியிடங்கள் இவர்களுக்கு கிடைக்கும். தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவு குறித்து, உதயசந்திரன் கூறியதாவது: தேர்வு நடந்த அன்றே, தேர்வாணைய இணையதளத்தில் விடைகள் வெளியிடப்படும். தேர்வருக்கு, இதில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், ஏழு நாட்களுக்குள் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும். அதன் பின், நிபுணர் குழு அமைத்து, ஆட்சேபத்திற்குரிய விடைகள் குறித்து ஆய்வு செய்து, இறுதி விடைகள் வெளியிடப்படும். ஆண்டு அட்டவணையில், செப்டம்பரில் தேர்வு முடிவு வெளியிடுவோம் என குறிப்பிட்டுள்ளோம். ஆனாலும், அதற்கு முன்னதாக ஆகஸ்டில் வெளியிட்டு விடுவோம். இவ்வாறு உதயசந்திரன் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை