PODHU NEWS | 338 தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு| Dinamalar
Advertisement
338 தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் வழங்குவதற்கான பொது கவுன்சிலிங், சென்னையில் நேற்று துவங்கியது. அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் 338 பேருக்கு, நேற்று பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று துவங்கியது. பள்ளிக் கல்வி இயக்குனர் மணி தலைமையில், காலையில், மாவட்டத்திற்குள் மாறுதல் பெறும் ஆசிரியர்களுக்கும், பிற்பகலில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறும் ஆசிரியர்களுக்கும், கவுன்சிலிங் நடந்தது. இரு கவுன்சிலிங்கும் சேர்த்து, 800 ஆசிரியர் கலந்து கொண்டனர். இவர்களில், 338 பேருக்கு, பணியிட மாறுதலுக்கான உத்தரவை, இயக்குனர் வழங்கினார். இணை இயக்குனர் கண்ணப்பன் (இடைநிலைக் கல்வி) கூறும்போது, ""380 இடங்கள் காலியாக இருந்தன. இதில், 338 பேருக்கு, பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளன. எனினும், மொத்த காலியிடங்கள், அப்படியே இருக்கும். 20ம் தேதி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடக்கிறது. அப்போது, தற்போதுள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும்'' என்றார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்