PODHU NEWS | நாகை, திருப்பூர் குடிநீர் திட்டம் கண்காணிப்புக்கு நிதி ஒதுக்கீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாகை, திருப்பூர் குடிநீர் திட்டம் கண்காணிப்புக்கு நிதி ஒதுக்கீடு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : நாகை, திருப்பூர் பகுதிகளில் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்திற்கான, கண்காணிப்பு, தகவல் தொகுப்பை கையாள, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாகை மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், குடிநீர் தொடர்பான அனைத்து பணிகள், வினியோக திட்டம், பம்ப்பிங் மையங்கள், சுத்திகரிப்பு மையங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், நீரழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்புகள் இவற்றை கண்காணித்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் டெலிமெட்ரி திட்டத்தை பொருத்தவும், ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்கவும், மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குனர், அரசுக்கு பரிந்துரைத்தார். இத்திட்டத்தை பரிசீலித்த தமிழக அரசு, திருப்பூர் மற்றும் நாகை மாவட்டத்தின் குடிநீர் திட்டத்திற்கு, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை