PODHU NEWS | பாறை பகுதிகளில் மரம் வளர்ப்பு வனத்துறை ரூ.18 லட்சம் ஒதுக்கீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாறை பகுதிகளில் மரம் வளர்ப்பு வனத்துறை ரூ.18 லட்சம் ஒதுக்கீடு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : வனப்பரப்பை அதிகரிக்கும் விதமாக, பாறை அதிகமுள்ள, 60 ஹெக்டேர் நிலத்தில், பலவகை மரங்களை நடுவதற்கு, 18 லட்சம் ரூபாய் ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, மொத்த நிலப்பரப்பில், 18.16 சதவீதம் வனப்பகுதி உள்ளது. தேசிய கொள்கையின் படி, நிலபரப்பில், 33.33 சதவீதம் வனப்பகுதி மற்றும் மரங்களால் சூழப்பட்டதாக இருக்க வேண்டும். தற்போது வனத்துறை சார்பில், அரசு புறம்போக்கு நிலங்கள், மலைக்குன்றுகளில் மரங்கள் நடப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றன. பாறைகள் நிறைந்த மலைப்பகுதிகளில் இப்பணியானது, வனத்துறைக்கு சவாலானதாக இருக்கிறது. இதையடுத்து, இந்த மலைப்பகுதிகள், மலை சரிவுகளில் வெற்றிடப் பரப்பு மற்றும் பாறைப் பிளவுகள் என, இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வனமாக மாற்ற முடிவெடுக்கப் பட்டு உள்ளது. 60 ஹெக்டேர் பாறைகள் நிறைந்த, 60 ஹெக்டேர், நிலத்தில் மரங்கள் நடுவதற்கு திட்டம் தயாரித்து, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அனுப்பியுள்ளார். இதன்படி, முதலில் பாறைகளை உடைத்து, அந்த பகுதிகளில் இயற்கை உரம் மற்றும் வளம் நிறைந்த மண்ணை நிரப்பி, தண்ணீர் வருவதற்கான அமைப்பும் உருவாக்கப் படுகிறது. அதன்பின், சீதா மரம், வேம்பு, கல்லிச்சி, அரசு, ஆலமரங்களை நட்டு வளர்க்கப்படும். இதற்காக ஒரு ஹெக்டேருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வீதம், 60 ஹெக்டேருக்கு, 18 லட்சம் ரூபாய் தேவைப்படும் என, அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது திட்ட மதிப்பீட்டை ஆய்வு செய்த தமிழக அரசு, இந்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டில், 60 ஏக்கர் பகுதியில் மரங்களை நடுவதற்கு, 18 லட்சம் ரூபாயை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை