PODHU NEWS | குடிநீருக்காக அணைக்கு படையெடுக்கும் யானைகள் : சீண்டுவோர் மீது நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை | Dinamalar
Advertisement
குடிநீருக்காக அணைக்கு படையெடுக்கும் யானைகள் : சீண்டுவோர் மீது நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

உடுமலை : "வனப் பகுதியினுள் வாகனங்களை நிறுத்தி, வன விலங்குகளுக்கு தொல்லை தந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையிலிருந்து, மூணாறு செல்லும் ரோட்டில், ஒன்பதாறு வனத்துறை செக்போஸ்ட் முதல், வனப்பகுதி துவங்குகிறது. அமராவதி மற்றும் உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட, புங்கன் ஓடை, காமனூத்து ஓடை, ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், யானை, மான் மற்றும், பல அரிய வகை வனவிலங்குகள் உள்ளன. வனப் பகுதிகளிலுள்ள விலங்குகள், குடிநீர் மற்றும் உணவுத் தேவைக்காக, அமராவதி அணையை நோக்கி படையெடுக்கின்றன. அமராவதி அணைக்கு, தண்ணீர் வரும் ஓடையில் குடிக்க, நூற்றுக்கணக்கான யானைகள், மான்கள், காட்டெருமைகள், அன்றாடம், மாலை, 4.00 மணி முதல், 6.00 மணி வரை, உடுமலை - மூணாறு ரோட்டை கடக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் போர்வையில், பலர், உடுமலை - மூணாறு ரோட்டிலுள்ள வனப்பகுதியை, குடி மையமாக மாற்றி, சக நண்பர்களுடன், கும்மாளம் போடுகின்றனர். பின், மதுபான பாட்டில்கள், டம்ளர்களை அப்படியே விட்டுச் செல்கின்றனர். இதனால், வன விலங்குகள், ரோட்டை கடக்க சிரமப்படுகின்றன. சிலர் வன விலங்குகளை சீண்டுவதும், அவை வாகனங்களை துரத்துவதும் தொடர் கதையாக உள்ளது. வன ஆர்வலர்கள் கூறுகையில்," வனத்திலிருந்து ரோட்டை கடக்கும் யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு, தொல்லை கொடுக்காமல் கடந்து செல்வதை ரசிக்க வேண்டும்; துன்புறுத்தக் கூடாது' என்றனர். அமராவதி வனச்சரக அலுவலர் விஜயகுமார் கூறியதாவது: உடுமலை - மூணாறு ரோட்டில், வனப்பகுதியில் மது குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மது குடிக்கின்றனரா என, கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. ரோட்டை கடக்கும் யானைகளுக்கு, தொல்லை கொடுப்பவர்களுக்கு, குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. தடையை மீறி வாகனங்களை நிறுத்தி விட்டு, வனத்திலுள்ள யானைகளுக்கு தொல்லை கொடுத்தால், வனவிலங்குச் சட்டத்தின்படி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்; வாகன உரிமையாளர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். எனவே, வனவிலங்குகளை தொல்லை செய்ய வேண்டாம். இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 24,2016