PODHU NEWS | போனில் அழைத்து பிறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போனில் அழைத்து பிறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில், பிறப்பு சான்றிதழ் பெற, லஞ்சமாக, 100 ரூபாய், "டிடி' எடுத்து அனுப்பியது தொடர்பாக, "தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, இரண்டு மாதத்திற்கு முன், விண்ணப்பித்தவர்கள் உட்பட, 100 க்கும் மேற்பட்டோரை போனில் அழைத்த நகராட்சி அதிகாரிகள், ஒரே நாளில் சான்றிதழ் வழங்கினர். விருதுநகர் நகராட்சியில், பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த, ஆடிட்டர் பழனிச்சாமி, அலைக்கழிக்கப்பட்டார். விருதுநகர் நகர் காங்., சார்பில், நகராட்சிக்கு துறை வாரியாக செலுத்த வேண்டிய, லஞ்சக் கட்டணம் குறித்து, "பேனர்' வைக்கப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டு, பிறப்பு சான்றிதழ் பெற, 100 ரூபாய்க்கான, வங்கி, "டிடி' எடுத்த பழனிச்சாமி, நகராட்சி கமிஷனர் - பொறுப்பு, சேர்மக்கனிக்கு தபாலில் அனுப்பினார். அதிர்ச்சியடைந்த அவர், பிறப்பு சான்றிதழ் வழங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார். அதன்படி, பழனிச்சாமி வீட்டிற்கே சான்றிதழ் சென்றது. இது தொடர்பான செய்தி, ஜூன் 16 ல், "தினமலர்' இதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து, இரு மாதமாக கிடப்பில் போடப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பிறப்பு சான்றிதழ் விண்ணப்பங்கள், சரி பார்க்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்களும், உடனடியாக தயார் செய்யப்பட்டன. இதற்காக காத்திருந்தவர்களை, நகராட்சி அதிகாரிகளே தொலைபேசியில் அழைத்து, அனைத்து பிறப்பு சான்றிதழ்களையும் வழங்கினர். இதில், நேற்று ஒரே நாளில் மட்டும், 150க்கு மேற்பட்டவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன . பாதிக்கப்பட்ட வைரமணி, ""பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து, மாதக்கணக்கில் அலைந்த என்னை போன்றவர்களை, திடீரென அழைத்து சான்றிதழ் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட நாட்களுக்குள் வேலை முடிக்காத அதிகாரிகள் குறித்து புகார் தெரிவிக்க, அதற்கான தொலைபேசி எண்களை, அனைவருக்கும் தெரியும் வகையில், ஒவ்வொரு அலுவலகத்திலும் குறிப்பிட வேண்டும்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை