DISTRICT NEWS | மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடி அடையாள அட்டை திட்டம் | Dinamalar
Advertisement
மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடி அடையாள அட்டை திட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை:மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை உடனடியாக பரிசோதித்து அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை நேற்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் முதன் முறையாக கலெக்டர் அன்சுல் மிஸ்ரா துவங்கி வைத்தார்.கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்தோறும் நடக்கும் குறைதீர் கூட்டங்களில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் கோரி மனு செய்கின்றனர். அவர்களில் பலருக்கும் அடையாள அட்டைகள் இல்லை.

கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து குறைதீர் கூட்டத்திலேயே அவர்களை பரிசோதித்து அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்தார்.
நேற்று நடந்த கூட்டத்திற்கு மனநல, முடநீக்கியல், கண் மற்றும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் நிபுணர் குழு தயார் நிலையில் இருந்தனர். இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்பாட்டில் பரிசோதனை செய்யப்பட்டு, உடல் குறைகளின் சதவீதம் கண்டறிந்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ""அடையாள அட்டைகள் இல்லாத மாற்றுத்திறனாளிகள் 4 பாஸ்போர்ட் போட்டோக்கள், ரேஷன்கார்டு நகலுடன் குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்று இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்,'' என, கலெக்டர் தெரிவித்தார்.ரூ.3.11 லட்சம் நலத்திட்டம்: தமிழக முதல்வரின் வாகன விபத்து நிவாரண நிதியுதவி சார்பில் 13 நபர்களுக்கு ரூ.ஒரு லட்சத்து 63,000 மதிப்பில் காசோலைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூளை, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 19 வயதுக்கு உட்பட்ட 20 பேருக்கு ரூ. ஒரு லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் சக்கர நாற்காலிகளையும் கலெக்டர் வழங்கினார்.

சமூக நலத்துறை மூலம் நலிவுற்றவர்கள் மற்றும் தையல் பயிற்சி நிலைய மாணவியர்களுக்கு 15 பேருக்கு ரூ.40,500 மதிப்பில் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராஜாராம், சமூக நலத்துறை அலுவலர் ஜெயலட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ், மாற்றுத்திறனாளி நல அலுவலர் மதிவாணன் பங்கேற்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்