PODHU NEWS | சிவகங்கை மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவ கவுன்சில் திடீர் வருகை| Dinamalar
Advertisement
சிவகங்கை மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவ கவுன்சில் திடீர் வருகை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சிவகங்கை : சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அகில் இந்திய மருத்துவ கவுன்சில் திடீரென வருகை தந்தனர். சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துவங்கி 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் டில்லியிலுள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலின் முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, 4 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சில பணிகளை குறிப்பிட்டு அவற்றை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். இந்நிலையில்,இந்த குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் மோகன் கே.தொயல்பாலா (மகாராஷ்டிரா), டாக்டர் பிரிசில்லா சந்திரன் (ஆந்திரா) ஆகியோர் நேற்று மதியம் 12 மணிக்கு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திடீர் "விசிட்' செய்தனர். நிர்வாக கட்டடம்,விரிவுரை அரங்குகள், நூலகம், மாணவ, மாணவிகள் விடுதி,டாக்டர்கள் குடியிருப்பு, சமையல் கூடம், மருத்துவமனையை சுற்றி பார்த்தனர். மதுரை அரசு மருத்துவமனை, சிவகங்கை மாவட்ட மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அங்கு வந்தனர். இவர்களுடன் குழுவினர் ஆலோசித்தனர். மருத்துவக் கல்லூரி டீன் முகமது இஸ்மாயில், துணை கண்காணிப்பாளர் முத்துவீரலட்சுமி, மதுரை அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் ராமானுஜம் சென்றனர். டாக்டர் மோகன் கே.தொயல்பாலா கூறுகையில்,"இம் மருத்துக்கல்லூரி வகுப்பறை வசதிகள், கட்டடங்கள் மற்றும் மருத்துவமனை பகுதிகளை ஆய்வு செய்தோம்.இது பற்றிய தகவல்கள் ரகசியமானது.எம்.சி.ஐ.,யிடம் தெரிவிப்போம்,'என்றார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்