PODHU NEWS | குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஒருநாள் நாடகம் போதுமா? | Dinamalar
Advertisement
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஒருநாள் நாடகம் போதுமா?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை : குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் தொழிலாளர் நலத்துறை,போலீசார், மாவட்ட நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்காததால், கிராமங்களின் வறுமை ஒழிப்பும் மாறவில்லை. குழந்தைத் தொழிலாளர்களும் குறையவில்லை. கிராமங்களில் விவசாயம் பொய்த்து போவதால், வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மொத்தமாக கிடைக்கும் சிறுதொகையை நம்பி, பிள்ளைகளை கூலித் தொழிலாளியாக்கி, பின் மீட்கமுடியாமல் பரிதவிக்கின்றனர். பின்விளைவுகளை அறியாமல், மூன்றாண்டு அல்லது ஐந்தாண்டு ஒப்பந்த தொழிலாளியாக பிள்ளையை அனுப்புகின்றனர். இவர்கள் வெளிமாநிலங்களில் உள்ள தமிழக நிறுவனங்களில் மிகக்குறைந்த கூலிக்கு பணியமர்த்தப் படுகின்றனர். இதற்கென புரோக்கர்கள் உள்ளனர். இடத்தைப் பொறுத்து ஒரு பிள்ளைக்கு ரூ.500 - ரூ.1000 வரை கமிஷன் பெறுகின்றனர். இதுகுறித்து, மதுரை சோகோ அறக்கட்டளை துணை இயக்குனர் செல்வகோமதி கூறியதாவது: மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சிலரே வெளிமாநிலங்களில் தொழிற்சாலை அமைத்துள்ளனர். இங்கே விசேஷங்களுக்கு வரும் போது, வறுமை நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றனர். தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், பெற்றோருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறும் போது, புரோக்கர்களின் கண்ணில் படும் போது, வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றனர். அங்கே அவர்களின் பெயரை மாற்றி விடுகின்றனர். நகர்ப்புற ஏழைகளின் பிள்ளைகள், அங்கேயே ஓட்டல், புத்தக விற்பனை, விவசாயம், இறைச்சிக் கடைகளில் வேலை செய்கின்றனர். குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் 14 வயது, இளஞ்சிறார் சட்டத்தின் மூலம் 18 வயதுக்குட்பட்டவர்களை மீட்கமுடிகிறது. ஆனால் முழுமையான நடவடிக்கை இல்லை, என்றார். என்ன தான் தீர்வு: கால்நடை துறை, மாவட்ட தொழில்மையம், கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் வாரியத்தின் கீழ், கறவை மாடு வளர்ப்புத் திட்டம், சிறு வணிகக்கடன், கிராமப்புறங்களில் உள்ள மூலாதாரத்தை வைத்து செய்யப்படும் சிறு தொழில்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகின்றன. இதுவே கிராம மக்களை முன்னேற்றும் மிகப்பெரிய ஆயுதம். கலெக்டர் மூலம் துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, கிராமங்களில், தொழில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புரோக்கர்களை, காவல் துறையினர் கைது செய்ய வேண்டும். தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். தொழிலாளர் நலத்துறையின், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தன்று மட்டும் கவனித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இந்த"ஒருநாள் நாடகத்தால்' எந்த பயனும் இல்லை. கிராமப்புறங்களில் நிரந்தர வேலை வாய்ப்பை உருவாக்கினால் தான், குழந்தைத் தொழிலாளர்களை இல்லாமல் செய்ய முடியும்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்