PODHU NEWS | அரசு விடுதிகளில் மாணவர் அல்லாதோர் தங்கினால் நடவடிக்கை :ஆதிதிராவிடர் நலத்துறை எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு விடுதிகளில் மாணவர் அல்லாதோர் தங்கினால் நடவடிக்கை :ஆதிதிராவிடர் நலத்துறை எச்சரிக்கை

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை : ஆதிதிராவிடர் விடுதிகளில், மாணவர் அல்லாதோர் தங்கினால், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், 1,254 விடுதிகளும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 40 விடுதிகளும் உள்ளன. இதில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் தங்கி வருகின்றனர். இவர்களுக்கு, மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் கோரிக்கை தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில், அதிக அளவில், மாணவர் அல்லாதோர் தங்கி வருகின்றனர். குறிப்பாக, அதே விடுதியில் தங்கி, படித்து முடித்த பின்னரும், அங்கேயே தொடர்ந்து தங்கி வருகின்றனர். மேலும், விடுதி அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகில் வசித்து வருபவர்களும், விடுதி அறைகளை ஆக்கிரமித்து வருகின்றனர்.
இதனால், அங்கு, முறையாக தங்கி உள்ள மாணவர்களுக்கு, பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. குறைந்த அளவு கொள்ளளவு கொண்ட அறையில், அளவுக்கு அதிகமானோர் தங்கி வருவதால், மாணவர்கள் நிம்மதியாக படிக்க முடியாத சூழ்நிலை உருவாகி வந்தது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, மாணவர்களிடையே எழுந்துள்ளது. நாடக ஆய்வுகள் விடுதியில், மாணவர் அல்லாதோர் தங்கி இருக்கின்றனரா என அறிவதற்கு, அதிகாரிகள் எப்போதாவது ஆய்வு மேற்கொள்வர். அப்போது, மாணவர் அல்லாதோர் பிடிபட்டாலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எச்சரித்து அனுப்புகின்றனர். இதனால், விடுதிகளில் ஆய்வு நடந்தாலும், எந்த மாற்றமும் எற்படுவதில்லை. சென்னையில் உள்ள பல விடுதிகளில், அப்பகுதியில் உள்ள சமூக விரோதிகள் அங்கு தங்குவதால், மாணவர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் பிரச்னை ஏற்படுகின்றது.
எனவே, இதை தவிர்க்க வேண்டுமெனில், ஆய்வு நடத்தும் அதிகாரிகள், முறையற்ற வகையில் தங்கி வருகின்றவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விடுதி மாணவர்கள் வேண்டுகின்றனர். கடும் நடவடிக்கை இது குறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில், மாணவர் அல்லாதோர் தங்கி வருகின்றனர். இது பற்றி புகார் வரும் போதெல்லாம், காவல் துறை மற்றும் துறை அதிகாரிகள் சகிதம், திடீர் ஆய்வுகள் நடத்தி வந்தோம். அப்போது, அதிக அளவில், பழைய மாணவர்கள் தங்கி இருப்பது தெரிய வந்தது. மேலும், அங்கு தங்கி உள்ள மாணவர்களின் உறவினர்கள் தங்கி இருந்ததை அறிந்தோம். ஒவ்வொரு முறையும் ஆய்வுக்கு செல்கிற போதும், அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினோம். படித்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, கடும் நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்த்தோம். இதனால், விடுதியில் தங்கி வருகிற மாணவர்களின் எண்ணிக்கை, அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது, விடுதியில் தங்கி வரும் மாணவர்களின் படிப்பை கவனத்தில் கொண்டு, கடும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம். இனி, அடிக்கடி காவல் துறை அதிகாரிகள், விடுதி காப்பாளர் கொண்ட குழுவோடு, திடீர் ஆய்வுகள் நடத்துவோம். அப்போது, மாணவர் அல்லாதோர் தங்கி இருந்தால், காவல் துறை மூலமாக, கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம். தற்போது, அரசு விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதால், விரைவில், அதற்கான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை