PODHU NEWS | நாகர்கோவிலில் காந்தி தங்கிய இடத்துக்கு அமைதி தூதுக்குழு வருகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாகர்கோவிலில் காந்தி தங்கிய இடத்துக்கு அமைதி தூதுக்குழு வருகை

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகர்கோவில் : நாகர்கோவிலில் காந்தி தங்கிய கல்லூரிக்கு அமைதி தூதுக்குழுவினர் வந்து காந்தியடிகள் தொடர்பான கண்காட்சியை நடத்தினர். கேரள காந்தி நிதியத்தின் வைர விழாவையொட்டி கேரள செய்தி மக்கள் தொடர்புதுறை, கேரள இளைஞர் நல மேம்பாட்டுத்துறை இணைந்து தென்னிந்திய மாநிலங்களுக்கிடையே காந்தி அமைதி பஸ் ஒன்றை இயக்குகிறது. கன்னியாகுமரியில் இருந்து மங்களூர் வரை செல்லும் இந்த அமைதி பஸ்சில் 40 இளைஞர்கள் பயணம் செய்கின்றனர். 10 காந்திய வழி தலைவர்களை இணைத்து இந்த பயணம் நடைபெறுகிறது. கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இந்த பயணம் தொடங்கியது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் காந்தியடிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த இடத்தை அமைதி தூதுக்குழுவினர் பார்வையிட்டனர். இதையொட்டி கல்லூரியில் காந்தியடிகளின் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி அனந்தன், ஹெலன்டேவிட்சன் எம்.பி., காந்தி நிதியத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர்அமைதிப்பயணம் பாறசாலை வழியாக திருவனந்தபுரம் சென்றது. படவிளக்கம் காந்தி அமைதி தூத்துக்குழுவின் வருகையை ஒட்டி நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் காந்தியடிகளின் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை