international news | எகிப்து தேர்தல்: சகோதரத்துவ கட்சி வெற்றி| Dinamalar

எகிப்து தேர்தல்: சகோதரத்துவ கட்சி வெற்றி

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எகிப்து தேர்தல்: சகோதரத்துவ கட்சி வெற்றி

கெய்ரோ: எகிப்து நாட்டில் நடந்த தேர்தலில், தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாக, சகோதரத்துவ கட்சி தெரிவித்துள்ளது. எகிப்து அதிபராக, 30 ஆண்டுகளாக கோலோச்சி வந்த முபாரக், பொது மக்களின் கடும் கண்டனம் மற்றும் தொடர் போராட்டம் காரணமாக, பதவி விலக நேரிட்டது. அவர் மீது, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


குழு அமைப்பு: அவருக்கு, அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க வேண்டும் என, பொது மக்கள், நீதித் துறையை கோரி வருகின்றனர். நாட்டில் பார்லிமென்ட் செயல்பாடுகளை, நீதிமன்றம் முடக்கியது. தொடர்ந்து, ராணுவ ஆட்சியாளர்கள் புதிய சட்ட திட்டங்களை வகுக்க முடிவு செய்து, அதற்காக, 100 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.


ஐனநாயக தேர்தல்: இந்நிலையில், எகிப்தில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான இரண்டாவது கட்ட தேர்தல், கடந்த 16 மற்றும் 17ம் தேதி நடந்தது. இதில், முபாரக் ஆட்சியின் போது பிரதமராக பதவி வகித்து, பின்னால் அவரால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, அகமது ஷாபிக் மற்றும் இஸ்லாமியர்களின் சகோதரர் எனக் கருதப்படும், முகமது மூர்சி ஆகியோர் போட்டியிட்டனர்.


மூர்சி வெற்றி: இதற்கிடையே, இந்த தேர்தலில், தங்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக, சகோதரத்துவ கட்சி அறிவித்துள்ளது. அதிகப்படியான ஓட்டுக்கள் பெற்று, வெற்றி பெற்ற கட்சியிடம் ஆட்சியை ஒப்படைப்போம் என, ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், எந்த கட்சி வெற்றி பெற்றது என்பது குறித்து, அரசிடமிருந்து முறையான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை