PODHU NEWS | சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் மோதல் ஏற்படும் அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் மோதல் ஏற்படும் அபாயம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : சினிமா தயாரிப்பாளர் சங்கத்திற்கு, எஸ்.ஏ.சந்திரசேகர் வந்தால், உள்ளே நுழைய விடமாட்டோம் என்று, அட்ஹாக் கமிட்டியினர், பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை மீறி, சந்திரசேகரன் இன்று சங்க அலுவலகத்திற்கு வந்தால், இரு அணியினருக்கும் இடையே, மோதல் ஏற்படும் நிலை உள்ளது. சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னையால், தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டாக உடைந்தது. சங்கத்தை, இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள, அட்ஹாக் கமிட்டி கைப்பற்றியது. சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பொருளாளர் தாணு, செயலர் தேனப்பன் ஆகியோரை, அட்ஹாக் கமிட்டி, ஆறு மாத காலம் நீக்கி வைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு, கோர்ட்டில் உள்ளது. வழக்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்க அட்ஹாக் கமிட்டி செயல்பாட்டிற்கு, இடைகாலத் தடை விதிக்க வேண்டும் என்று, ஜெயலட்சுமி என்ற தயாரிப்பாளர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததில், சங்க வங்கி கணக்கு உட்பட, எந்த பரிவர்தனையும் மேற்கொள்ள, இப்ராகிம் ராவுத்தருக்கு, வரும் ஜூலை 6ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையால், சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரனும், ஆதரவாளர்களும், சங்கத்திற்கு செல்வதற்கு பாதுகாப்பு கேட்டு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரை, நேற்று சந்தித்து கேட்டனர். எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆதரவாளர்களில் ஐந்து பேர், நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வந்துள்ளனர். இவர்கள், நாளைக்கு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் சங்கத்திற்கு வரப் போகிறார் என்று கூறிச்சென்றதாக கூறப்படுகிறது. பரபரப்பு அட்ஹாக் கமிட்டியினர், வங்கிக் கணக்குகளை மேற்கொள்ளக் கூடாது என்று மட்டுமே, கோர்ட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகரன், தாணு, தேனப்பனை, அட்ஹாக் கமிட்டி ஆறு மாதம் நீக்கி வைத்தது தொடர்பாக, கோர்ட்டில் சந்திரசேகரன் போட்ட வழக்கு, இன்னும் முடியவில்லை. அந்த தீர்ப்பு வரும் வரை, எஸ்.ஏ.சந்திரசேகரன், தாணு, தேனப்பன் ஆகியோரை, சங்கத்தில் நுழைய விடமாட்டோம் என்று, அட்ஹாக் கமிட்டி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதனால், தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு, சந்திரசேகரன் வந்தால், அட்ஹாக் கமிட்டியினர் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்படும். இதனால், இரு அணியினருக்கும் இடையே, மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது என்று, தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில், நேற்று மாலை பரபரப்பாக பேசப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை