PODHU NEWS | 100 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

100 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக உயர்வு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : நூறு அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டது. சட்டசபை கூட்டத் தொடரில் வெளியிடப்பட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் என, தலா ஒன்பது முதுகலை ஆசிரியர் பணியிடம் வீதம், 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்தும், அரசு உத்தரவிட்டுள்ளது. துறை செயலர் சபிதா வெளியிட்ட அரசாணையில், ""ஒரு ஆசிரியருக்கு, 40 மாணவர் என்ற விகிதத்தை பின்பற்றுவதுடன், நடைமுறையில் உள்ள விதிமுறைகளை நிறைவு செய்ய, பள்ளிக்கல்வி நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி உதவியைப் பெற முயற்சி எடுக்க வேண்டும். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் உரிய நெறிமுறைகள் பூர்த்தி செய்யப்படுகிறதா என்பதை, முதன்மைக் கல்வி அலுவலர் கண்காணிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை