PODHU NEWS | 299 புதிய பாடப்பிரிவுகள் அரசு கல்லூரிகளில் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

299 புதிய பாடப்பிரிவுகள் அரசு கல்லூரிகளில் துவக்கம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : நடப்பு கல்வியாண்டில், 51 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 299 புதிய இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகளை துவக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2012-13ம் கல்வியாண்டில் புதிய இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் துவக்கவும், அதைதொடர்ந்து 2012-13, 2013-2014 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளில் தேவையான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கி, தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய, கல்லூரிக் கல்வி இயக்குநர் கருத்துரு வழங்கியிருந்தார். அதைதொடர்ந்து, நடப்பாண்டிற்கான உயர்கல்வி மானிய கோரிக்கையில், 51 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 299 புதிய பாடப்பிரிவுகள், நடப்புக் கல்வியாண்டு முதல் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நியமனம் அதன்படி, நடப்புக் கல்வியாண்டு முதல், 51 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 299 புதிய இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகளைத் துவக்கலாம். இக் கல்லூரிகளில் துவக்கப்படும் புதிய பாடப்பிரிவுகளுக்காக, ரூ.15,000-39,100+ரூ.6,000(தர ஊதியம்) என்ற ஊதிய விகிதப்படி, நடப்பு ஆண்டிற்கு, 369 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும், 2013-14ம் ஆண்டிற்கு, 365 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும், 2014-15ம் ஆண்டிற்கு 107 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் என ஆக மொத்தம் 841 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில், புதிதாகத் துவக்கப்படும் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகளின் முழு விவரங்களை, தமிழக அரசின் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை