PODHU NEWS | நெல்லையில் கண்காணிப்பு கேமரா : கமிஷனர் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் கண்காணிப்பு கேமரா : கமிஷனர் தீவிரம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நெல்லையில் கண்காணிப்பு கேமரா : கமிஷனர் தீவிரம்

திருநெல்வேலி : நெல்லையில் குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. திருநெல்வேலியில் குற்றங்கள், போக்குவரத்து விதி மீறல்களும் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றை தடுக்க, நெல்லை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை, போலீஸ் கமிஷனர் கருணாசாகர் முடுக்கி விட்டுள்ளார். ஏற்கனவே நெல்லையப்பர் கோயில் ரதவீதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது ஜங்ஷன், புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. ஒரு கி. மீ., வரை, நிகழ்வுகளை கண்காணித்து, பதிவு செய்ய முடியும். கமிஷனர் கூறுகையில், ""இதன் மூலம் பாளையங்கோட்டை, சமாதானபுரம் முதல் நெல்லை டவுன் வரை, கண்காணிக்க முடியும்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை