PODHU NEWS | மாநகராட்சியின் "குப்பை நிர்வாகம்' : சென்னை அதிகாரி ஆய்வு | Dinamalar
Advertisement
மாநகராட்சியின் "குப்பை நிர்வாகம்' : சென்னை அதிகாரி ஆய்வு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை : கோவை மாநகராட்சி செயல்படுத்தி வரும், திடக்கழிவு நிர்வாகம் குறித்து பார்வையிட, சென்னை மாநகராட்சி இணை ஆணையர்,நேற்று, கோவை வந்தார். சென்னை மாநகராட்சியில், தினமும் குவியும் குப்பைக் கழிவுகள், பள்ளிக்கரணை, கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் குவிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக இவ்வாறு குவிக்கப்பட்டுள்ள குப்பைக் கழிவுகள், சிறு மலைகளாக குவிந்து, அப்பகுதி மக்களுக்குப் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு முன், குப்பையில் வைக்கப்பட்ட தீயில் இருந்து, கிளம்பிய புகை, வாகன நடமாட்டமே தெரியாத அளவுக்கு ரோட்டில் சூழ்ந்தது. கோவை மாநகராட்சியில், தினமும் 600 டன் குப்பை குவிந்தாலும், அவற்றைப் பாதுகாப்பான முறையில், தற்போது குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. தனியார் உதவியுடன், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. கோவையில் செயல்படுத்தப்படும், இத்திட்டம் குறித்து நேரில் கண்டறிய, சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் அனந்தகுமார், நேற்று, கோவை வந்தார். வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கு, உரம் தயாரிக்கும் முறை, மீதமாகும் குப்பைகளை அறிவியல்சார் முறையில் பாதுகாப்பாக குழிதோண்டிப் புதைக்கும் தொழில்நுட்பம், புகை எழும்பாமல் தடுக்கும் முறை உள்ளிட்ட அனைத்து நிர்வாக முறைகளையும் ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பொறியாளர் லட்சுமணன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் ஆகியோர் அவருக்கு திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து விளக்கினர். கோவை மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ""பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டுள்ள பழைய குப்பைகளைப் பாதுகாப்பாக, குழிதோண்டி மூடும் தொழில்நுட்பம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர் பகுதிகளில் ஏற்கனவே குப்பைக் கழிவுகள் மூடப்பட்டு, அந்த இடத்தில் பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களையும் பார்வையிட்ட இணை கமிஷனர் அனந்தகுமார், சென்னை மேயர் மற்றும் கமிஷனரிடம் ஆலோசித்த பின், இதே திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகத் தெரிவித்தார்,'' என்றனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்