international news | கிரீஸ் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி | Dinamalar
Advertisement
கிரீஸ் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், புதிய ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள கிரீஸ் நாடு, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம், இங்கு இரண்டாவது கட்டமாக, பொது தேர்தல் நடந்தது. 300 இடங்களுக்கான பார்லிமென்ட் தேர்தலில், வலது சாரி கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி, 129 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், இந்த கட்சி ஆட்சி அமைப்பதற்கு உரிய மெஜாரிட்டி பெறாததால், மற்ற கட்சிகள் இணைந்து, கூட்டணி ஆட்சி அமைக்க முன்வந்துள்ளது. இதற்காக, ஜனநாயக கட்சியின் தலைவர் அந்தோணி சமராஸ், இதர கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். ஆனால், 71 இடங்களை பெற்றுள்ள சிரிசா கட்சி, ஆட்சியில் பங்கேற்க மறுத்து விட்டது. எதிர்க் கட்சி வரிசையில் அமரப் போவதாக, இதன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கிரீசில், புதிய அரசு அமைய உள்ளதால், இந்த நாட்டின் பொருளாதார மீட்பு உதவிக்கான நிபந்தனைகளை தளர்த்த, ஜெர்மனி இசைவு தெரிவித்துள்ளது.


Advertisement

மேலும் உலகம் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்