international news | போலியோ சொட்டு மருந்து பிரசாரத்துக்கு தலிபான்கள் தடை| Dinamalar

போலியோ சொட்டு மருந்து பிரசாரத்துக்கு தலிபான்கள் தடை

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வாஜிரிஸ்தான் பகுதியில்,போலியோ சொட்டு மருந்து திட்டத்துக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.


தலிபான் ஆதிக்கம்: ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வாஜிரிஸ்தான் பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த பகுதியை அரசு பெயரளவில் தான் ஆட்சி செய்கிறது. மற்றபடி இங்கு பழங்குடிகள் போர்வையில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.


மருத்துவர் காரணம்: அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன், அபோதாபாத்தில் கடந்த ஆண்டு அமெரிக்க அதிரடி படையினரால் கொல்லப்பட்டார். போலியோ சொட்டு மருந்து கொடுப்பது போன்ற போர்வையில் பாகிஸ்தான் டாக்டர் ஷகீல் அப்ரிடி, ஒரு குழுவை அமைத்து ஒசாமாவை நோட்டமிட்டு அமெரிக்க உளவு படையினருக்கு அவர் பதுங்கியிருந்த இடத்தை காட்டிக்கொடுத்தார். இதற்காக அப்ரிடிக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


"சொட்டு மருந்து போடுவதாக கூறி அமெரிக்கா வேவு பார்ப்பதால், வாஜிரிஸ்தான் பகுதியில் போலியோ தொடர்பான எந்த பிரசாரமும் மேற்கொள்ளக்கூடாது. அதுமட்டுமல்லாது பழங்குடி பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லாத விமானங்கள் தாக்குதல் நடத்துவதால் அப்பாவிகள் பலர் பலியாகின்றனர்' எனவே, அமெரிக்கா ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதை நிறுத்தும் வரை, இந்த பகுதியில் போலியோ சொட்டு மருந்து பிரசாரம் நடத்த தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.


பிரசாரத்திற்கு தடை: "தலிபான்களின் இந்த உத்தரவால், போலியோவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனினும் தலிபான்களின் உத்தரவை மீறி செயல்பட முடியாது'என, வாஜிரிஸ்தான் மக்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை