international news | பிரான்ஸ் அமைச்சரவை கலைப்பு| Dinamalar

பிரான்ஸ் அமைச்சரவை கலைப்பு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டு பார்லிமென்ட் தேர்தலில், சோஷலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. பிரான்ஸ் நாட்டில், கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, அதிபர் சர்கோசி பதவி விலகினார். சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரான்காய்ஸ் ஹோலன்ட், புதிய அதிபராக பொறுப்பேற்றார். இதற்கிடையே, 577 இடங்கள் கொண்ட பிரான்ஸ் பார்லிமென்டுக்கு, இரண்டு நாட்களுக்கு முன், தேர்தல் நடந்தது. இரண்டாவது கட்டமாக நடந்த இந்த தேர்தலில், சோஷலிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, பிரான்ஸ் அமைச்சரவை, மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கு வசதியாக, பிரதமர் ஜீன் மார்க் அயிரால்ட் தலைமையிலான அமைச்சரவை, நேற்று ராஜினாமா செய்தது. பார்லிமென்ட் தேர்தலுக்கு பிறகு, அமைச்சரவை மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது, சம்பிரதாயம் என்பதால், அமைச்சரவை கலைக்கப்பட்டது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தான், கடந்த ஒரு மாதமாக, அமைச்சர்களாக இருந்தனர். எனவே, மீண்டும் இதே அமைச்சர்கள், புதிதாக பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில், தற்போது காணப்படும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், புதிய அரசு திட்டங்களை அமல்படுத்த உள்ளது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை