international news | இந்திய டிரைவர் மீது ஆஸி.,யில் தாக்குதல்| Dinamalar

இந்திய டிரைவர் மீது ஆஸி.,யில் தாக்குதல்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய டாக்சி டிரைவர் தாக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர் கதையாக உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அரசிடம் இந்தியா, பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இதற்கிடையே மெல்போர்னில் உள்ள சன் ஷைன் என்ற பகுதியில், ஹர்ப்ரீத் சிங் என்ற டாக்சி டிரைவர், நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். இரண்டு கார்களில் வந்த ரவுடிகள் ஹர்ப்ரீத் சிங்கிடம் பணத்தையும், மொபைல் போனையும் பிடுங்கிக் கொண்டனர். மேலும் அவரிடம் பணம் கேட்டுள்ளனர். கொடுக்காததால் அவரது காரை பேஸ்பால் மட்டையால் தாக்கியுள்ளனர். அவரையும் அதே மட்டையால் தாக்கியுள்ளனர். மற்றொரு ரவுடி அவரை முகத்தில் குத்தியுள்ளான். இதில் ஹர்ப்ரீத் சிங்குக்கு உதட்டிலும், மூக்கிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இவரை போலவே அங்கு நின்றிருந்த மேலும் சில டிரைவர்களை இந்த ரவுடிகள் தாக்கி விட்டு காரில் தப்பிச் சென்று விட்டனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை