SAMBAVAM NEWS | கொடைக்கானல் சிறுவன் வினோத நோயால் பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் சிறுவன் வினோத நோயால் பாதிப்பு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கொடைக்கானல் சிறுவன் வினோத நோயால் பாதிப்பு

திண்டுக்கல் : தலைமட்டும் ஆண்டுதோறும் பெரிதாவது, கால்கள் உள்நோக்கி சுருங்கி நடக்க முடியாமல் போவது என, வினோத நோயால் கொடைக்கானல் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான். கொடைக்கானல் மூஞ்சிக்கல்லை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவமணி. இவரது மனைவி அமுதா. மகன் பாண்டியராஜன்,12. இவன் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். திண்டுக்கல் கலெக்டரிடம் சிவமணி தந்துள்ள மனு: எனது மகனுக்கு என்ன நோய் என்று தெரியவில்லை. ஆண்டுக்கு, ஆண்டு தலை பெரிதாகி கொண்டே செல்கிறது. பாதங்கள் நடக்க முடியவில்லை. மூளையில் ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். பண வசதி கிடையாது. மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும், எனக்கூறியுள்ளனர். மாவட்ட ஊனமுற்றோர் அதிகாரி கனகராஜ் கூறியதாவது: சிறுவனுக்கு தண்டுவட கோளாறு காரணமாக, ஹைட்ரோ செப்பாலி எனப்படும் நோய் தாக்கியுள்ளது. மூளையை சுற்றி திரவ சுரப்பிகள் அதிகமாகி, தலைபெரிதாகி வருகிறது. நோய் தாக்குதலால் மாணவன் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை தர நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை