SAMBAVAM NEWS | கடலூரில் அரிய வகை வெள்ளை நாகம் : அரசு காப்புக் காட்டில் விடப்பட்டது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலூரில் அரிய வகை வெள்ளை நாகம் : அரசு காப்புக் காட்டில் விடப்பட்டது

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கடலூரில் அரிய வகை வெள்ளை நாகம் : அரசு காப்புக் காட்டில் விடப்பட்டது

கடலூர் : கடலூரில், ஆசிரியர் வீட்டில் புகுந்த வெள்ளை நாகத்தை, வன உயிரின ஆர்வலர் பிடித்து, காப்புக் காட்டில் விட்டார். கடலூர், வண்டிப்பாளையம் ரோடு, சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல்; ஆசிரியர். இவரது வீட்டில், நேற்று மாலை, மூன்று அடி நீளமுள்ள பாம்பு புகுந்தது. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து, வெளியே ஓடி வந்தனர். சிலர், பாம்பை அடிக்க முயன்றனர். இந்நிலையில், பாம்புகளைப் பிடிக்கும் வன உயிரின ஆர்வலர், கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பூனம்சந்திற்கு போனில் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பூனம்சந்த், ஆசிரியர் சக்திவேல் வீட்டு மாடி படிக்கட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த, மூன்றடி நீளமுள்ள வெள்ளை நாகத்தைப் பிடித்தார். இதுகுறித்து பூணம்சந்த் கூறுகையில், "இதுவரை 7,000க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்துள்ளேன். அரிய வகை வெள்ளை நாகத்தை இப்போது தான் பிடித்துள்ளேன்' என்றார். பிடிபட்ட வெள்ளை நாகம், வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன், வேப்பூர் பகுதியில் உள்ள அரசு காப்புக் காட்டில் விடப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை