SAMBAVAM NEWS | ஆடு மேய்க்க சிறுவர்கள் விற்பனை : ஏர்வாடி அருகே நடந்த கொடூரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆடு மேய்க்க சிறுவர்கள் விற்பனை : ஏர்வாடி அருகே நடந்த கொடூரம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆடு மேய்க்க சிறுவர்கள் விற்பனை : ஏர்வாடி அருகே நடந்த கொடூரம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே, ஆடு மேய்க்க விற்கப்பட்ட சகோதரர்கள், காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். நயினார்கோவில் அடுத்துள்ள, சித்தனேந்தலை சேர்ந்தவர் வீரம்மாள்,50. இரண்டு நாட்களுக்கு முன், ஈரோடு செல்வதற்காக, அரசடிவண்டல் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சகோதரர்களான, குமார்,13, முனீஸ்வரன்,8, ஆகிய இருவரும், வீரம்மாளிடம், "சில நாட்களாக, ஆடு மேய்க்க கூறி ஒருவர், கொடுமைப் படுத்தி வருகிறார். ஒரு வேளை சாப்பாடு மட்டுமே தருகிறார். ஆடு மேய்க்கும் நேரங்களில், பிச்சை எடுத்து, அவ்வப்போது சாப்பிட்டு வருகிறோம்' எனக் கூறினர். வீரம்மாள், இருவரையும் ஈரோடு அழைத்துச் சென்றார். பவானி ஜம்பையில் உள்ள, அவர் ஓட்டலில், இருவருக்கும் வேலை கொடுத்தார். இந்த விவரம், ராமநாதபுரம் அருகே செவ்வூரை சேர்ந்த, தங்கமுத்துவுக்கு தெரிய வந்து, இருவரையும் அழைத்து வருவதற்காக, ஈரோடு சென்றார். வீரம்மாளிடம், "சில ஆண்டுகளுக்கு முன், ஏர்வாடி அருகே கல்பாரை சேர்ந்த எலுவக்கால் என்ற பெண்ணிடம், தலா, 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து, சிறுவர்களை விலைக்கு வாங்கினேன். எனவே, சிறுவர்களை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும்' எனக் கூறி, தகராறு செய்தார். தங்கமுத்துவுடன் செல்ல, சிறுவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, வீரம்மாளின் மகன் சரவணன், சிறுவர்களை, ராமநாதபுரம் அழைத்து வந்தார். நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், சிறுவர்களை, கலெக்டர் நந்தகுமாரிடம் ஒப்படைத்து, "இவர்களை, நாங்களே வளர்ப்பதற்கு, அனுமதிக்க வேண்டும் அல்லது, சிறுவர்களை அவர்களது தாயிடம் ஒப்படைக்க வேண்டும்' என கோரி மனு கொடுத்தனர்.
சிறுவர்களின் தாய் எங்குள்ளார் என தெரியாத நிலையில், கலெக்டர் உத்தரவுப்படி, சிறுவர்கள், சமூகநலத் துறை காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை