SAMBAVAM NEWS | தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு வழங்குவதைக் கண்டித்து மறியல்| Dinamalar
Advertisement
தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு வழங்குவதைக் கண்டித்து மறியல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தூத்துக்குடி : தாமிரபரணி தண்ணீரை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்குவதை கண்டித்து, ஸ்ரீவைகுண்டத்தில் சாலைமறியல் செய்த விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வடகால் பயிர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும், அணையிலிருந்து தினமும் தனியார் தொழிற்சாலைகளுக்கு 20 மில்லியன் கேலன்(9 கோடி லிட்டர்) தண்ணீர் தருவதை கைவிடவேண்டும், அத்திட்டத்திற்காக ராட்சத குழாய்களை போட்டு அணையில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை அகற்றவேண்டுமென வலியுறுத்தி, ஸ்ரீவைகுண்டம், புதுக்குடியில் தாமிரபரணி வடகால் பாசன விவசாயிகள், நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடகால் பாசன திட்டக்குழு தலைவர் உதயசூரியன் தலைமை வகித்தார். இந்தமறியலால், திருச்செந்தூர்- நெல்லை மெயின்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்த 45 பெண்கள் உட்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்