SAMBAVAM NEWS | தேனி மாவட்டத்தில் தொடர் கொள்ளை : அடுத்தடுத்து 4 வீடுகளில் துணிகரம் | Dinamalar
Advertisement
தேனி மாவட்டத்தில் தொடர் கொள்ளை : அடுத்தடுத்து 4 வீடுகளில் துணிகரம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பெரியகுளம் : தேனி மாவட்டம் பெரியகுளத்தில், அடுத்தடுத்து நான்கு வீடுகளில் நடந்துள்ள துணிகர கொள்ளை சம்பவங்கள் போலீசாருக்கு சவால் விடுப்பதாக அமைந்துள்ளது. ஒரே வாரத்தில் மட்டும் ஆறு இடங்களில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் தென்கரை கோட்டைத்தெருவைச் சேர்ந்தவர்கள் வெள்ளைத்தாய், செல்லம்மாள், காமாட்சி. இவர்களின் வீடுகள் அருகருகில் உள்ளன. உறவினர்கள் வீட்டு விசேஷத்திற்கு வெளியூர் சென்றிருந்தனர். நேற்று காலை இவர்களது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதில் வெள்ளைத்தாய் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு 3,500 ரூபாயும், செல்லம்மாள் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, 2,000 ரூபாயும், காமாட்சி வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு பட்டுச்சேலைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. வடகரை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ராஜாமுகமது வீட்டிலும் பீரோ உடைக்கப்பட்டு, ஒன்றே முக்கால் பவுன் தங்க நகையும், 3 ஆயிரம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடன், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். வடுகபட்டியில் சில தினங்களுக்கு முன் வக்கில் ஜெயராமன் வீட்டில் 30 பவுன் நகைகளும், அடுத்த மூன்று நாட்களுக்குள் ஆசிரியர் அங்கயற்செந்தில்குமார் வீட்டில் 60 பவுன் நகை, 80 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சவால்: பெரியகுளம், வடுகபட்டியில் ஒரே வாரத்தில் ஆறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக அமைந்துள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்