SAMBAVAM NEWS | வெடிபொருள் ஏற்றி வந்த வேன் சிறைபிடிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடிபொருள் ஏற்றி வந்த வேன் சிறைபிடிப்பு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே வெடிபொருட்களை ஏற்றி வந்த வேனை, பொதுமக்கள் சிறைபிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, பூதப்பாண்டி பன்னியோடு பகுதியில், கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு, பாறைகள் உடைக்கப்படும் போது ஏற்படும் அதிர்வு காரணமாக, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கல்குவாரியை அப்புறப்படுத்தக் கேட்டு, இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கல்குவாரிக்கு தேவையான வெடிபொருட்களுடன், வேன் வருவதை பார்த்த அப்பகுதி மக்கள், மறியல் நடத்தி, வேனை சிறை பிடித்தனர். தகவலறிந்த பூதப்பாண்டி போலீசார், அங்கு சென்று, வேனை சோதனை செய்தனர். அதில், 75 கிலோ ஜெலட்டின் குச்சிகள், 225 எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள் இருந்தன. எனினும் உரிய ஆவணங்கள் இருந்தது. இதை தொடர்ந்து கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை