SAMBAVAM NEWS | லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் துவக்கம் : துறைமுக பணிகள் தேங்கும் அபாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் துவக்கம் : துறைமுக பணிகள் தேங்கும் அபாயம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் துவக்கம் : துறைமுக பணிகள் தேங்கும் அபாயம்

சென்னை : கன்டெய்னர் லாரி டிரைவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளதால், சென்னை துறைமுகப் பணிகள் தேங்கும் அபாயம் உள்ளன. சென்னைத்துறைமுக வளர்ச்சிக்கேற்ப, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், நெருக்கடி நீடித்து வருகிறது. சரக்கு பெட்டகங்களை ஏற்றி வரும் லாரிகள், வடசென்னை சாலைகளில், நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், "ஜீரோ' கேட்டில், டோல் முறை கொண்டு வர வேண்டும், ஒரு நாள் பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், பழுதான சாலைகளை சீரமைத்துத் தர வேண்டும் என்பது போன்ற, 18 கோரிக்கைகளை, துறைமுக லாரி டிரைவர், கிளீனர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நேற்று துவக்கினர். இந்த போராட்டத்துக்கு, துறைமுக டிரெய்லர் லாரி உரிமையாளர்களும் ஆதரவு அளித்ததால், துறைமுக வாயில்கள் வெறிச்சோடிக் கிடந்தன. லாரிகள், ஆங்காங்கே யார்டுகளில் நிறுத்தப்பட்டிருந்தன. லாரிகள் இல்லாதாõல், முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. வேலை நிறுத்தத்தால், தற்போது பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது; தொடர்ந்தால், வர்த்தகம் பெருமளவு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, லாரி டிரைவர், கிளீனர் சங்க செயலர் ஆசைத்தம்பி கூறும்போது,"துறைமுக நிர்வாகம், இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதில், எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என நம்புகிறோம்' என்றார். இதுகுறித்து, துறைமுகத்தில் ஆய்வுக்கு வந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனிடம் கேட்டபோது,""சாலை விரிவாக்கப்பணி முடிந்தால் மட்டுமே நெரிசல் தீரும். அதுவரை, நெரிசல் தவிர்க்க முடியாது,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை