SAMBAVAM NEWS | கமுதியில் ஜெர்மன் நிறுவன பெயரில் வீடு கட்டி தருவதாக நூதன மோசடி | Dinamalar
Advertisement
கமுதியில் ஜெர்மன் நிறுவன பெயரில் வீடு கட்டி தருவதாக நூதன மோசடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, ஐந்து கிராமங்களை சேர்ந்த, 47 பேரிடம், ஜெர்மன் நிறுவன உதவியுடன் வீடு கட்டித் தருவதாகக் கூறி, 3.25 லட்ச ரூபாய் நூதன மோசடி செய்த கும்பல் மீது, நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமாரிடம், கிராமத்தினர் புகார் கொடுத்தனர். கமுதி அருகே, வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர், வழிவிட்டான். அ.தி.மு.க., - எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகியான இவரும், திருச்சிலுவைபுரம் சவரிமுத்துவும், ஆண்டுதோறும் வேளாங்கண்ணிக்கு, பாதயாத்திரை செல்வது வழக்கம். அவ்வாறு சென்றபோது, நாகப்பட்டினம் கீழையூர் சேகர் என்பவர், சில உதவிகள் செய்து கொடுத்ததில், பழக்கமானார். இதன்பின், கமுதிக்கு சிலருடன் வந்த சேகர், "ஜெர்மன் நிறுவனம், ஒரு பொருளை பாதுகாப்பாக வைத்திருக்கக் கூறியுள்ளது. அந்த பொருளை, உங்கள் ஊரில் வைத்துக் கொள்வதுடன், ஒரு நபர், 5,000 ரூபாய் டெபாசிட் செய்தால், ஜெர்மன் நிறுவனம், குறிப்பிட்ட பொருளை எடுத்துச் சென்று விற்பனை செய்யும்போது, டெபாசிட்தாரருக்கு, வீடு கட்ட ஒரு லட்சம் ரூபாய் வழங்கும்' என, ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய வழிவிட்டான், தங்கராஜ், சவரிமுத்து, செந்தூரான், முத்துச்சாமி ஆகியோர், ஏஜன்ட்களாக இருந்து, இவர்கள் பங்கிற்கு, தலா, 25 ஆயிரமும், கமுதி அருகே கீழ்குடி, முஷ்டக்குறிச்சி, வெள்ளையாபுரம், திருச்சிலுவைபுரம், நெடுங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த, 47 பேரிடம் வசூல் செய்த, 2 லட்ச ரூபாய் சேர்த்து, 3.25 லட்ச ரூபாயை, 2010ல், சேகரிடம் கொடுத்தனர். பல மாதங்களாகியும், வீடு கட்டித் தரவும் இல்லை; பணத்தையும் திருப்பித் தரவில்லை. திருப்பிக் கேட்டபோது, சேகர் தரப்பினரால் மிரட்டப்பட்டதாக, வழிவிட்டான், தங்கராஜ் மற்றும் கிராமத்தினர், எஸ்.பி.,யிடம் நேற்று, புகார் கொடுத்தனர். அவர் உத்தரவுப்படி, குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்