SAMBAVAM NEWS | சூளகிரி அருகே அடகு கடையில் சுவரில் துளை போட்டு கொள்ளை | Dinamalar
Advertisement
சூளகிரி அருகே அடகு கடையில் சுவரில் துளை போட்டு கொள்ளை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஓசூர் : ஓசூர் அருகே சூளகிரியில், நகை அடகுக் கடையில் சுவரில் துளை போட்டு, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 30 கிலோ வெள்ளி, தங்க நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர், சோகன்லால், 26. இவர், ஓசூர் அடுத்த சூளகிரி சந்தைபேட்டையில், நகை அடகுக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், தங்கம், வெள்ளி பொருட்களை அடகு வைப்போருக்கு, வட்டியுடன் கூடிய கடன் கொடுப்பதை முழு நேர தொழிலாக நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்து சென்றார். நேற்று காலை கடையைத் திறந்து பார்த்தபோது, கடையில் இருந்த ஏராளமான வெள்ளிப் பொருட்கள், தங்க நகைகளைக் காணவில்லை. கடையின் பின்புற சுவரில் துளைபோட்டு, மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து, 30 கிலோ வெள்ளி பொருட்கள், சிறு சிறு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. சோகன்லால், சூளகிரி போலீசில் புகார் செய்தார். இவரது கடையில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள், முதலில், இவரது கடைக்கு அருகேயுள்ள அன்வர் பாட்ஷாவுக்கு சொந்தமான ஜுவல்லரி கடையில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அவரது கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். பூட்டை உடைத்த கொள்ளையர்களால், கடையின் முன் பக்க இரும்பு கிரில் கதவை, உடைக்க முடியவில்லை. ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள், இந்த கடையின் பின்புறமாகச் சென்று, சுவரை துளையிட முயற்சி செய்துள்ளனர். அதுவும் முடியாததால், சோகன்லால் கடையின் பின்புற சுவரை துளையிட்டு, உள்ளே நுழைந்து, வெள்ளிப் பொருட்கள், தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். சோகன்லால், அடகுக்கு வந்த மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த வெள்ளிப் பொருட்களை மட்டும் தினம் கடையில் வைத்து சென்றுள்ளார். சிறு, சிறு தங்க நகைகளை மட்டும் கடையில் வைத்து விட்டு பெரும்பாலான தங்க நகைகளை வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார். அதனால், அடகுக்கு வந்த பெரும்பாலான தங்க நகைகள் தப்பியது. சூளகிரி போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்