SAMBAVAM NEWS | "ஜெனித் ஹெர்பல்' பண இரட்டிப்பு மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் | Dinamalar
Advertisement
"ஜெனித் ஹெர்பல்' பண இரட்டிப்பு மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சேலம் : "ஜெனித் ஹெர்பல்' பண இரட்டிப்பு மோசடி வழக்கை, பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றி, ஐ.ஜி., ஆறுமுகம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, விடுபட்டவர்கள் உடனடியாக புகார் தரும்படி, பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், "ஜெனித் ஹெர்பல்' நிறுவனத்தை துவக்கிய ஜெகதீசன், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில், முகவர்களை நியமித்து, மூலிகை பண்ணை பெயரில், டெபாசிட் வசூலித்தார். மூலிகை பண்ணையில் முதலீடு செய்தவர்களுக்கு, 45 நாளில் பணம் இரட்டிப்பாக தருவதாக, பத்திரம், காசோலைகள் வழங்கப்பட்டன. இதை நம்பி, 300க்கும் மேற்பட்டோர், முகவர்கள் மூலமாக, பல கோடி ரூபாயை, "ஜெனித் ஹெர்பல்' நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இரு மாதங்களுக்கு முன், பண இரட்டிப்பு மோசடி கும்பல், திடீரென தலைமறைவாகி விட்டது. பல கோடி ரூபாயை பறிகொடுத்த பொதுமக்கள், சேலம் எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் வசம் புகார் செய்தனர். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட, 13 முகவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, சேலம் குகை பகுதியைச் சேர்ந்த மோகன், "ஜெனித் ஹெர்பல்ஸ்' நிறுவனத்தில், 10 லட்சத்து, 5,000 ரூபாயை முதலீடு செய்து, ஏமாந்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். ஏற்கனவே, மூலிகை பண்ணை மோசடியில், "கம்பி எண்ணும்' 13 பேர் மீது, மீண்டும் இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி நடவடிக்கை எடுத்தார். அதன்படி, சிறையில் உள்ள 13 பேர், இரண்டாவது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய ஜாமின் மனு தள்ளுபடி ஆனதால், ஒரு மாதத்துக்கும் மேலாக, "உள்ளே' இருந்து வருகின்றனர். இந்நிலையில், மோசடி கும்பலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகளை பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிட ஏதுவாக, எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ், இவ்வழக்கை, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி, பரிந்துரை செய்தார். அதன்படி, தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டப்படி, மூலிகைப் பண்ணை பண இரட்டிப்பு மோசடி வழக்கை, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி ஐ.ஜி., ஆறுமுகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்