district news | குடிநீர் கணக்கீட்டு கருவி விவகாரத்தில் அலட்சியம்| Dinamalar

தமிழ்நாடு

குடிநீர் கணக்கீட்டு கருவி விவகாரத்தில் அலட்சியம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சேலம்: சேலம் மாநகராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படும் குடிநீரின் அளவை கண்டறிவதற்காக பொருத்தப்பட்ட, "குடிநீர் மீட்டர்கள்' (குடிநீர் கணக்கீட்டு கருவி) முறையாக கண்காணிக்கப்படுவதில்லை. சீரான குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்கு முக்கிய காரணமாக விளங்கும் இப்பிரச்னைக்கு தீர்வுகாண, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் மாநகராட்சிக்கு, சேலம்-ஆத்தூர் குடிநீர் திட்டத்தின் மூலம், நாள்தோறும், 590 லட்சம் லிட்டர், சேலம்-நங்கவள்ளி குடிநீர் திட்டத்தின் மூலம், 14 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மாநகராட்சியில், 22 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. குறைந்தபட்சம், ஆறு லட்சம் லிட்டர் கொள்ளளவு, அதிகப்பட்சம், 20 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் தேக்கி வைக்கப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு நாளும், குடிநீர் தொட்டிகளுக்கு ஏற்றப்படும் குடிநீர் அளவை காட்டுவதற்காக, மாநகரில், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், "குடிநீர் மீட்டர்கள்' (குடிநீர் கணக்கீட்டு கருவி) பொருத்தப்பட்டுள்ளது.
கணக்கீட்டு கருவிகள் முறையாக கண்காணிக்கப்பட்டால், தினமும் பெறப்படும் குடிநீரின் அளவு, பயன்பாட்டுக்கான வினியோகத்தின் அளவு உள்ளிட்ட விபரங்களை துல்லியமாக கணக்கிட முடியும்.


முறைகேடான குடிநீர் இணைப்புக்களுக்கு, 24 மணி நேரம் குடிநீர் சப்ளை, வணிக நிறுவனங்களுக்கு, டிராக்டரில் லட்சக்கணக்கில், திருட்டுத் தனமாக விற்பனை செய்வது ஆகிய பணிகளில், அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கணக்கீட்டு கருவி முறையாக கண்காணிக்கப்பட்டால், தங்களுக்கு சிக்கல் வரும் என்பதால், பல இடங்களில், குடிநீர் மீட்டரை, அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. ஒருசில இடங்களில், அதிகாரிகள் அவர்களாகவே, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, "குடிநீர் அளவை' குறித்துச் சென்று விடுகின்றனர்.
சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு, நாள்தோறும், சேலம்-ஆத்தூர் குடிநீர் திட்டத்தின் கீழ், ஏழு கோடி லிட்டர் குடிநீரும், சேலம்-ஆத்தூர் குடிநீர் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே, 30 லட்சம் லிட்டர் குடிநீரும் வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு தேவைக்கும் குறைவான அளவே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கொண்டலாம்பட்டி மட்டும் அல்லாது, பிற மண்டலங்களிலும், இதே நிலைமைதான் நிலவி வருகிறது. குடிநீர் கணக்கீட்டு கருவிகளை முறையாக கண்காணித்தால், மண்டலம் வாரியாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.
இதன் மூலம், மாநகரம் முழுவதும், திட்டமிட்டபடி சீரான குடிநீர் வினியோகிக்க முடியும். குடிநீர் கணக்கீட்டு கருவி விவகாரத்தில், அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது குறித்து,மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், மாநகராட்சி கமிஷனர் அசோகன் ஆகியோர், விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்தால், மாநகரில், அனைத்து வார்டுகளிலும், சீரான குடிநீர் வினியோகம் கிடைக்க வாய்ப்புள்ளது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை