district news | மலேரியா விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மலேரியா விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாகூர்: பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடந்தது.

பாகூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் ராசன்பிரசாத் வரவேற்றார். தலைமை மருத்துவ அதிகாரி உமாசங்கர் தலைமை தாங்கினார். மருத் துவ அதிகாரி சுஜித்குமார் முன்னிலை வகித்தார்.

மலேரியா திட்ட உதவி இயக்குனர் காளிமுத்து, மலேரியா நோய் எதிர்ப்பு மாதம் கொண்டாடுவதன் முக்கியத்துவம், மலேரியா நோய் தாக்காமல் தடுப்பது குறித்து விளக்கம் அளித்தார். உதவி பூச்சியியலாளர் முருகசாமி, தொழில்நுட்ப உதவியாளர் சிவசங்கரன், பள்ளி துணை முதல்வர் மணிவண்ணன், முதுநிலை செவிலியர் எஸ்தர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.சுகாதார உதவியாளர் கிரி நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை