district news | வாஞ்சிநாதன் மன்ற விழா | Dinamalar

பொது செய்தி

இந்தியா

வாஞ்சிநாதன் மன்ற விழா

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடி வாஞ்சிநாதன் மன்றத்தின் 42வது ஆண்டு விழா மற்றும் வாஞ்சிநாதனின் 101 நினைவு தினம் மன்றத்திடலில் நடந்தது.

மன்ற ஆண்டு விழாவிற்கு கவுரவத் தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். மன்ற தலைவர் மணி வரவேற்றார். ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தி, வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜரத்தினம், நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், விடுதலைப் போராட்ட வீரர் முருகேசன், கிராம சேவகர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக வாஞ்சிநாதனின் 101வது நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவை சேர்ந்த பாஸ் கரன், அருணகிரி, ராஜா, செல்வகுமார், விசுவலிங்கம், ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மன்ற செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை