district news | கொள்ளையடிக்க திட்டம்: 6 வாலிபர்கள் கைது| Dinamalar

கொள்ளையடிக்க திட்டம்: 6 வாலிபர்கள் கைது

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி: கொள்ளையடிக்க திட்டம் போட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

நெல்லித்தோப்பு மாதாக்கோவில் வீதியில் உள்ள மேரி பின்புறம் ஒரு கும்பல் கூட்டுக்கொள்ளை அடிக்க தயாராகி வருவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு நேற்று முன் தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது போலீசாரைக் கண்டதும் அந்தக் கும்பல் தப்பியோட முயன்றது. அவர்களை போலீசார் விரட்டிப் பிடித்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த இரண்டு கத்திகளைப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அவர்கள் நெல்லித்தோப்பு ஒத்தவாடை வீதியைச் சேர்ந்த அசோக், 19; ஸ்ரீபன் 19; பெரியார் நகரைச் சேர்ந்த ரஞ்சித் 19; மணிகண்டன் 25; பிரான்சிஸ், 20; வெங்கடேஷ், 26; என்பது தெரிய வந்தது.போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிபதி உத்தமராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை