PODHU NEWS | முதல்வருக்கு தந்தி: செவிலியர்கள் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு தந்தி: செவிலியர்கள் முடிவு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள், பணி நிரந்தரம் கோரி, முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடத்த உள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் 6,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர் கூட்டமைப்பு சார்பில், முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடக்க உள்ளது. இதுகுறித்து பேசிய கூட்டமைப்பின் தலைவர் ரவீந்திரநாத், "அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த பணியாளர்களாக உள்ள செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, சுகாதாரத் துறை அமைச்சர், செயலர் ஆகியோருடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் சுமூக தீர்வு எட்டப்படாததால், அடுத்த கட்டமாக, வரும் 25, 26ம் தேதிகளில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடத்த உள்ளோம்' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை